ஒரு பந்து கூட வீச முடியாமல் பாக்-இலங்கை உ.கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இலங்கை 3வது இடம்

By செய்திப்பிரிவு

பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பை 2019-ன் 11வது ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் கடும் மழையால் பாதிக்கப்பட பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது, இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றது.

 

இதன் மூலம் இலங்கை அணி 3 ஆட்டங்களில் 1 வெற்றி மூலம் 3 புள்ளிகள் பெற்று நிகர ரன் விகிதம் -1.517 என்ற நிலையில் உள்ளது.  நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகள் பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளது.

 

பாகிஸ்தான் 4ம் இடத்திலும் மே.இ.தீவுகள், இங்கிலாந்து 5 மற்றும் 6ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியிருப்பதால் 7வது இடத்தில் உள்ளது.

 

இன்று நடுவர்கள் நீஜல் லாங், இயன் கோல்ட் ஆகியோர் உள்ளூர் நேரம் 3.45 மணியளவில் ஆட்டம் சாத்தியமில்லை என்று அறிவித்தது.

 

இந்த ஆட்டம் ரத்தானதால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்த இலங்கை அடுத்த உலகக்கோப்பை வரை காத்திருக்க வேண்டியதுதான், இதுவரை பாகிஸ்தான் 7-0 என்று வெற்றியில் முன்னிலை வகிக்கிறது.

 

பாகிஸ்தான் அணி தற்போது 5 நாட்கள் இடைவெளியைக் கொண்டாடிய பிறகு ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இலங்கை அணி ஜூன் 11ம் தேதி வங்கதேசத்தை பிரிஸ்டலில் சந்திக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்