மூன்று ஸ்லிப்களுடன் கடும் ‘அட்டாக்’: பும்ராவின் வேகத்தில் திணறும் தென் ஆப்பிரிக்கா

By செய்திப்பிரிவு

சவுத்தாம்டன் வானிலை ஸ்விங் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் பும்ரா பந்துகளின் வேகம், எழுச்சி, ஸ்விங் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்களுக்கு கடும் சிக்கல்களைத் தோற்றுவிக்க அந்த அணி ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக் இருவரையும் இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது.

 

டாஸ் வென்ற டுபிளெசிஸ் இன்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார், காரணம் முதல் 2 போட்டிகளில் பவுலிங்கைத் தேர்வு செய்து தோல்வி தழுவியது தென் ஆப்பிரிக்கா. இன்று இதனால் பேட்டிங்கைத் தேர்வு செய்தார், ஆனால் பும்ராவின் பந்து வீச்சு அந்த அணிக்கு கடும் சிரமங்களைத் தோற்றுவிக்கிறது.

 

வானிலை ஸ்விங்குக்குச் சாதகமாக பிட்சும் ஒரு ஹார்ட் பிட்சாக இருப்பதால் பந்துகள் சற்றே எழும்புகின்றன, இதனையடுத்து 3 ஸ்லிப்களை வைத்து விராட் கோலி அட்டாக் செய்து வருகிறார்.

 

முதல் ஓவரில் புவனேஷ்குமார் 2 ரன்களைக் கொடுக்க, அடுத்த ஓவர் வந்தார் பூம் பூம் பும்ரா,  ஓவர் த விக்கெட்டில் மணிக்கு 137-140 கிமீ வேகத்தில் இடது கை பேட்ஸ்மெனின் உடலுக்குக் குறுக்காக பந்தை ஒரு கோணத்தில் ஸ்விங் செய்ய டி காக் பீட்டன் ஆகத் தொடங்கினார். தோனியே கீப்பிங் செய்ய திணறினார் ஒரு பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி பேட்ஸ்மெனைக் கடந்து ஸ்விங் ஆகி முதல் ஸ்லிப்பிற்குச் சென்றது, தோனி கிளவ்வை நீட்ட விரலில் பட்டு ஒரு ரன் ஆனது.

 

இதற்கு அடுத்த பந்து ஆம்லா குட் லெந்தில் விழுந்ததை ஆம்லா கிரீசிலிருந்து தடுத்தாட முயன்றார் பந்து வெளியே எடுத்து எட்ஜ் ஆகி ரோஹித் சர்மா கையில் தஞ்சமடைந்தது.

 

அடுத்த பந்தே டுபிளெசிஸுக்கு இன்சைடு எட்ஜில் பவுண்டரி ஆனது.  குவிண்டன் டி காக் 10 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீச்சின் உஷ்ணம் தாங்காமல் ஆடி வந்த நிலையில் பும்ரா ஒரு பந்தை சற்றே வைடாக ஓவர் பிட்ச் போல் வீச டி காக் அது ஒரு ஷாட் வாய்ப்பு என்று தவறாகக் கருத எட்ஜ் ஆகி 3வது ஸ்லிப்பில் கோலியின் கையில் தஞ்சமடைந்தது.  தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் பும்ரா.

 

டுப்ளெசிஸ் 11 ரன்களுடனும் வான் டெர் டூசன் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 8 ஒவர்கள் முடிவில் 31 ரன்கள். பும்ரா 4 ஓவர் 11 ரன்கள் 2 விக்கெட்.  ஷமி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஷமியை உட்கார வைத்தது மோசமான ஒரு முடிவாக இல்லாமல் இருந்தால் சரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்