ஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்

By செய்திப்பிரிவு

லண்டனில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளநிலையில், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்து வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்துக்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஆட்டம் இன்று லண்டன், லாட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதற்கான தீவிரமான பயிற்சியில் இங்கிலாந்து அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது லண்டனில் எம்சிசி அகாடெமியில் சேர்ந்து சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பயற்சி எடுத்து வருகிறார். எம்சிசி 19வயதுக்குட்பட்டோருக்கான அணியிரும் அர்ஜுன் டெண்டுல்கர் இணைந்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் லீக் ஆட்டத்துக்காக லண்டனில் நேற்று இங்கிலாந்து அணியினர் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீசி பயிற்சியில் ஈடுபட்டார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பலருக்கும் பந்துவீசினார். அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீசும் வீடியோவை, கிரிக்இன்போ, ஆஸ்திதிரேலிய கிரிக்கெட் வாரியம் ஆகியவை பகிர்ந்துள்ளன.

இதற்கு முன் அர்ஜுன் டெண்டுல்கர் தனக்கு 15வயதாக இருந்தபோதிருந்தே இங்கிலாந்து அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் குழுவில் கடந்த 2015-ம் ஆண்டு அர்ஜுன் இருந்தபோது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணிக்கு பந்துவீசியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டது.அப்போது, 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அர்ஜுன் டெண்டுல்கர் இருந்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்