‘நோயையும், பவுலர்களையும் அடித்து நொறுக்கினார்’ - யுவராஜ் குறித்து சேவாக் உள்ளிட்டோர் புகழாரம்

By செய்திப்பிரிவு

அதிரடி இடது கை வீரர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் தூணாக ஒருநாள் போட்டிகளில் செயல்பட்ட யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

 

அவருடன் ஆடிய சேவாக், கயீஃப், கோலி உள்ளிட பலர் யுவராஜுக்கு வாழ்த்துக் கூறி ட்வீட் பதிவு செய்துள்ளனர்:

 

சேவாக்: “வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் யுவராஜ் சிங் போன்ற ஒரு வீரரை இனி கண்டுபிடிப்பது அரிது. பல கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார். நோயையும் பவுலர்களையும் அடித்து நொறுக்கினார். இதயங்களை வென்றார். தன் போராட்டக்குணம், மன உறுதி மூலம் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளார். அகத்தூண்டுதலாக இருந்துள்ளார். யுவி உனக்கு வாழ்க்கையில் சிறந்தது அமையட்டும். எப்போதும் வாழ்த்துக்கள்.

 

மொகமது கைஃப்: கிரிக்கெட் ஆட்டத்தின் மிகச்சிறப்பான மேட்ச் வின்னர்களில் ஒருவர். கடினமான சவால்களுக்கு இடையில் அசாதாரணமான ஒரு கிரிக்கெட் வாழ்வு அவருடையது. ஒவ்வொரு முறையும் சவால்களில் வின்னராகவே வந்துள்ளார். உங்களை நினைத்துப் பெருமையடைகிறோம் யுவராஜ். நாட்டுக்காக நீங்கள் செய்ததை நினைத்து நீங்களும் பெருமையடைய முடியும்.

 

விராட் கோலி: வாழ்த்துக்கள் யுவராஜ் சிங். நிறைய இனிய நினைவுகளையும் வெற்றிகளையும்  எங்களிடம் விட்டுச் சென்றுள்ளீர்கள். இனி வரும் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். முழுநிறை சாம்பியன் நீங்கள்.

 

கெவின் பீட்டர்சன்: மகிழ்ச்சி ஓய்வு. நிறைய உயர்வுகளுடன் சில கொடூரமான தாழ்வுகளுடனும் மறக்க முடியாத ஒரு கிரிக்கெட் வாழ்க்கை. நீங்கள் பொறுமை, உறுதி, தைரியம் தூய்மையான சிறப்பான ஆட்டம் ஆகியவற்றை நீலசீருடை காலக்கட்டத்தில் சாதித்திருக்கிறீர்கள்.

 

கவுதம் கம்பீர்: வாழ்த்துக்கள் பிரின்ஸ் யுவராஜ், இந்தியாவின் மிகச்சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டர் நீங்கள்தான். உங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பாக பிசிசிஐ உங்கள் 12ம் எண் ஜெர்சியை ரிட்டயர் செய்ய வேண்டும். உங்களை மாதிரி பேட்  செய்ய ஆசைப்பட்டேன் சாம்பியன்.

 

சுரேஷ் ரெய்னா: ஒரு சகாப்தத்தின் நிறைவு. உங்கள் பேட்டிங், உங்களுடைய அற்புத சிக்சர்கள், உயர்தர கேட்ச்கள்.  நம்மிடையே கழிந்த நல்ல தருணங்கள் ஆண்டுகளுக்கு அப்பாலும் இனி இருக்கப்போவதில்லை. நீங்கள் களத்துக்குக் கொண்டு வந்த உயர்தரம் மற்றும் தைரியம் எப்போதுமே அகத்தூண்டுதலான ஒன்று. நன்றி, சரிசம 2வது இன்னிங்ஸ் உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்.

 

விவிஎஸ். லஷ்மண்: யுவியுடன் விளையாடுவது ஒரு பெரிய மகிழ்ச்சியூட்டும் தருணம். ஆட்ட வரலாற்றில் கிரேட்டஸ்ட்களில் ஒருவராக உங்கள் பெயர் இருக்கும். குட் லக்.

 

ரிஷப் பந்த்: நம்பிக்கை அறிவுரையாளர், போராளி, லெஜண்ட், மிகநல்ல மனிதர்.

 

ஆகாஷ் சோப்ரா: திறமை வாய்ந்த வீரர்களில் ஒருவர். பெரிய மேட்ச் வின்னர்.  உங்களது 2வது இன்னிங்சும் முதல் இன்னிங்ஸ் போல் அனாயாச மட்டைச் சுழற்றலாக இருக்கட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

38 mins ago

கல்வி

31 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

34 mins ago

ஓடிடி களம்

41 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்