தோனி இல்லாமல் ஹாட்ரிக் விக்கெட்டா?- வாய்திறந்த முகமது ஷமி

By பிடிஐ

மகேந்திர சிங் தோனி இல்லாமல் என்னால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருக்க முடியாது, அவரின் ஆலோசனைதான் முக்கியக் காரணம் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

சவுத்தாம்டனில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் லீ்க் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 224ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 213 ரன்கள் சேர்த்து  11 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி (10 ஓவர்கள் வீசிய 4 விக்கெட்டுகள்) ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.  கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியி்ல இந்திய அணி வீரர் சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தபின் அதன்பின் 32 ஆண்டுகளுக்குப்பின் ஷமி எடுத்து சாதனை புரிந்தார். உலகக் கோப்பையில்  எடுக்கப்பட்ட 10 ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும்.

இந்த சாதனை குறித்து முகமது ஷமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைக்கும் என்று எந்தவிதமான நம்பிக்கையும் எனக்கு இல்லை. முதலில் முகமது நபி ஆட்டமிழந்து சென்றவுடன் டெய்லண்டர்கள் இருவர் வந்தனர். அப்போது, மகி பாய்(தோனி) என்னிடம் வந்து அடுத்த இரு பந்துகளையும் யார்கராக வீசுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தார்.

இப்போது இந்த வாய்ப்பை விட்டால் ஹாட்ரிக் எடுப்பது கடினம். இப்போதைக்கு எந்தவிதான பந்துவீச்சும் யோசிக்காதே, யார்கர் மட்டும் வீசு. உனக்கு கிடைத்திருக்கும் அரிதான வாய்ப்பு இது, நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய் என்றார்.

நானும் மகிபாய்(தோனி) சொன்னபடி அடுத்த இரு பந்துகளையும் யார்கர்களாக வீசினேன்.

இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட குழுவில் இடம் கிடைப்பது கடினமானது, சிறிது அதிர்ஷ்டம் வேண்டும். எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அதை  பயன்படுத்திக் கொள்வேன். ஹாட்ரிக் விக்கெட்டை பொருத்தவரை உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் அரிதானது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இவ்வாறு முகமது ஷமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்