அனைத்து கால உலகக்கோப்பை அணி: தன்னைத்தானே கேப்டனாக தேர்வு செய்து கொண்ட கிரேம் ஸ்வான்

By செய்திப்பிரிவு

உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கிறது, முன்னாள் வீரர்கள் சிலர் தங்களின் அனைத்து கால சிறந்த  உலகக்கோப்பை அணிகளை அறிவித்திருந்தனர், அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் கிரேம் ஸ்வான் தனது உலகக்கோப்பை சிறந்த அணியை அறிவித்துள்ளார்.

 

இதில் வேடிக்கை என்னவெனில் தான் தேர்வு செய்த அணிக்கு அவர் தன்னையே கேப்டனாக அறிவித்துக் கொண்டதுதான்.

 

இவரது அணியில் யாரும் செய்யாத ஒரு தேர்வு யாரெனில் இலங்கையின் அரவிந்த டி சில்வா. அரவிந்த டிசில்வா 1996 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் லாகூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து அணியை வெற்றிக்கும் சாம்பியன் பட்டத்துக்கும் இட்டுச் சென்றவர்.

 

அதே போல் இன்னொரு நபர் இயன் போத்தம், இவரை மற்ற அணித்தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை, மாறாக கிரேம் ஸ்வான் தன் சிறந்த உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளார்.

 

கிரேம் ஸ்வான் அறிவித்த அனைத்துக் கால உலகக்கோப்பை அணி வருமாறு:

 

இயன் போத்தம், ஆடம் கில்கிறிஸ்ட், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், இம்ரான் கான், அரவிந்த டி சில்வா, ஷேன் வார்ன், கிரேம் ஸ்வான் (கேப்டன்), வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்