நடனமாடும் பிராவோ ஹர்பஜன்.. நாதஸ்வரத்துடன் தோனி, ரெய்னா: மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் 2018 ஆம் ஆண்டுக்கான சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே வீரர்கள் விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்று வருகின்றன.

போட்டிகள் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணி சார்ந்த பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர்களாக விளங்கும் தோனி, ரெய்னா, பிராவோ, விஜய் மற்றும் இதர சென்னை வீரர்களும் அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தனியார் நிறுவனத்துக்கான விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா, விஜய் உட்பட சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த வீரர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி நடனமாடுகின்றனர். இதை கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்களது விருப்பப்பாடலுக்கு ஏற்றவாறு எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு போட்டோஷூட்களும் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ரெய்னா, தோனி, ஜடேஜா நாதஸ்வரத்தை வாசிக்கும் போட்டோ ஒன்றையும் சென்னை சூப்பர் கிங்ஸின் ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் சிஎஸ்கே வீரர்களை ஒன்றாகப் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கனிஷ்க் சேத், ஷேன் வாட்சன், மோனுகுமார், சைதன்ய பிஷ்னாய், ஷிதிஷ் சர்மா, துருவ் ஷோரி, லுங்கி இங்கிடி, டிவைன் பிராவோ, ஷர்துல் தாக்குர், டுபிளெசிஸ், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண் (வி.கீ/பேட்ஸ்மென்), மார்க் உட், அம்பாத்தி ராய்டு, கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

மேலும்