விரைவில் பிரச்சினைகள் தீரும்; மனைவியுடன் எப்போதும் போல் இருப்பேன்: மொகமது ஷமி

By ஏஎன்ஐ, ஐஏஎன்எஸ்

பல பெண்களுடன் தொடர்பு உள்ளது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் வீர்ர் மொகமது ஷமி மீது அவரது மனைவி தொடுக்க, இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது, விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்தபிறகும் ஷமி என்னை தாக்கினார். அவரது குடும்பம் என்னை கொல்ல முயற்சிக்கிறது. நான் ஷமியின் தவறை திருத்திக் கொள்ள நிறைய நேரம் அளித்துவிட்டேன். நான் எனது குடும்பத்துக்காகவும், குழந்தைகாகவும் பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் அவரை பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக புகார் அளிக்க இருக்கிறேன்” என்று ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் நேற்று புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் ஷமியின் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் மெசெஞர் உரையாடல்களையும் அவர் வெளியிட்டார், இதில் ஷமி பல பெண்களுடன் உரையாடியிருப்பது பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்களின் புகைப்படம், தொலைபேசி எண்களையும் ஹசின் ஜஹான் வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் சட்ட நடவடிக்கைக்கு முன்னதாக ஷமி தன்னிடம் மீண்டும் திருந்தி வருவார் என்று மனைவி ஜஹான் நம்புவதாக இவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஷமி கூறியதாவது:

என் சொந்த வாழ்க்கை பற்றி எழுந்த அவதூறுகளை நான் மறுக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது, என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை கெடுக்க சில வேலைகள் நடந்து வருவதாகவே கருதுகிறேன்.

அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது. அதற்கு அர்த்தம் இல்லை. இதன் பின்னணி என்னவென்பது தெரியாமல் நான் இது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. இதன் பின்னணியில் சதி உள்ளது, என் ஆட்டத்தை கெடுக்கும் முயற்சியும் சதியும் தெரிகிறது.

நான் என் மனைவி ஹசினை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவர் என் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. விரைவில் அவரை நேரில் சந்திப்பேன். நான் இதுவரை எப்படி அவருடன் இருந்தேனோ அப்படித்தான் இனியும் இருப்பேன், அவருடன் தான் என் வாழ்க்கை. என் மாமனாரிடம் பேசினேன், அவர் என்னிடம் நல்ல முறையில்தான் பேசினார். விரைவில் அனைத்தும் சரியாகி விடும்.

இவ்வாறு கூறினார் ஷமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்