தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆஸி. அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: ரபாடா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

போர்ட்எலிசபெத் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. வார்னர் 69 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். மறுமுனையில் நிதானமாக பேட் செய்த பான்கிராப்ட் மதிய உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் 91 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னருடன் இணைந்து பான்கிராப்ட் 98 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளைக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது. உஸ்மான் கவாஜா 4 ரன்களில் பிலாண்டரிடம் தனது விக்கெட்டை இழந்தார். சிறிது நேரத்தில் வார்னர், நிகிடி பந்தில் போல்டானார். வார்னர் 100 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார். இதைத் தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்டிங்கை ரபாடா, சீர்குலைத்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (25), ஷான் மார்ஷ் (24), மிட்செல் மார்ஷ் (4), பாட்கம்மின்ஸ் (0), மிட்செல் ஸ்டார்க் (8) ஆகியோரை சீரான இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தார் ரபாடா. 182 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் டிம் பெய்ன், நாதன் லயன் ஜோடி சற்று தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்தது.

நாதன் லயனை 17 ரன்களிலும், டிம் பெய்னை 36 ரன்களிலும் போல்டாக்கி வெளியேற்றினார் நிகிடி. முடிவில் ஆஸ்திரேலிய அணி 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோஸ் ஹசல்வுட் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5, நிகிடி 3, பிலாண்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி தனது 9 விக்கெட்களை 143 ரன்களுக்கு பறிகொடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்