ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

By செய்திப்பிரிவு

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் இறுதிச் சுற்றில் 249.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக அவர், தகுதி சுற்றில் 631.4 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையை படைத்திருந்தார். 18 வயதான இளவேனிலுக்கு இது 2-வது உலகக் கோப்பை தொடராகும். கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் அவரால் 28-வது இடமே பிடிக்க முடிந்திருந்தது. சீன தைபேவின் லின் யிங் 248.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீனாவின் வாங் செரு 228.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இந்த பிரிவில் சீன தைபே அணி வெள்ளிப் பதக்கமும், சீன அணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுடா 226.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதே பிரிவில் சீனாவின் லியூ யுகி 247.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஹங்கேரியின் பெக்லர் 246 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்