‘கடித்துக் குதறும் நாயாக வார்னரை வளர்க்கின்றனர்; ஸ்மித், லீமேனுக்கும் தடை விதிக்க வேண்டும்’ : இயன் சாப்பல் கடும் சாடல்

By ராமு

வார்னர்-டிகாக் விவகாரத்தில் வார்னரை இவ்வாறு நடக்க ஊக்குவிப்பவர்கள் பயிற்சியாளர் டேரன் லீ மேனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்த்தும்தான் எனவே இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார்.

அசிங்கமாக நடந்து கொள்ளும் வார்னருக்கு கேப்டன் ஸ்மித், கோச் லீ மேன் மற்றும் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆகியோர் வக்காலத்து வாங்கிவரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் இந்தப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“சஸ்பென்ஷன் மிகச்சரியானது. இத்தகைய போக்கை அடியோடு, வேரோடு அகற்ற வேண்டும், அதற்குக் காரணமானவர்களுக்கும் தடை விதிப்பதுதான் முறை. வார்னர் தனது வார்த்தைகள் செயல்களுக்கு பொறுப்பாகிறார், அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனும்போது அவரை ஊக்குவிக்கும் அவருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

வார்னரை ஊக்குவிப்பவர்களையும் தடை செய்வதை நான் விரும்புகிறேன். இவ்வாறாக வலுவான நடவடிக்கை எடுத்தால் இத்தகைய நடவடிக்கையை அனுமதிப்பவர்களும் திருந்துவார்கள், ஆட்டமும், களமும் கொஞ்சம் தெளிந்த மனநிலையில் இருக்கும். மேலே இருப்பவர்களின் முட்டாள்தனங்களுக்கு வீரர்கள் இரையாகிறார்கள். வார்னரை எப்போதும் கடித்துக் குதறும் நாயாக மேலே உள்ளவர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

களத்தில் நடக்கும் இத்தகைய மோசமான செயல்களுக்கு கேப்டனே பொறுப்பு என்கிறது விதிமுறைகள். எனவே ஸ்டீவ் ஸ்மித் இதனைத் தடுக்கவில்லை எனும்போது அவரும் இதற்குக் கூட்டாளியே.

நான் 15 ஆண்டுகாலமாகக் கூறி வருகிறேன், களத்திலோ வெளியிலோ வீரர்களிடையே கைகலப்பில் போய் இது முடியும். அன்று வார்னருக்கும் டிக்காக்குக்கும் இடையே அத்தகைய சூழல் ஏற்பட்டது. கொதிப்படையும் போது நிச்சயம் தனிப்பட்ட முறையில் ஏதாவது கூறுவதுதான் நிகழும்.

எவ்வளவு முட்டாள்தனம், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா தடை செய்யப்படுவதற்கு அருகில் இருக்கிறார் என்பதற்காக அவரை குதறுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் கூறியதாக படித்தேன். இது என்ன போக்கு? டெஸ்ட் போட்டிக்கு முன்பே இவ்வாறு கூறும்போது அதிகாரிகள் இரு அணித் தலைவர்களையும் கூப்பிட்டு பேசியிருக்க வேண்டும். இது பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் யார் எல்லை மீறினாலும் கேப்டன் உட்பட தடை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்க வேண்டும்.

இப்படிக் கூறும்போது நான் ஆடிய காலத்தில் களத்தில் வீரர்களிடையே இத்தகைய பரிமாற்றம் இல்லை என்று கூறவரவில்லை. மாறாக இது முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதல்ல, ஒரு வீரரை இலக்கு வைத்து வசைபாட வேண்டும் என்பதெல்லாம் முன் கூட்டியே அணி கூட்டத்திலும் ஆலோசனைக் கூட்டத்திலும் தீர்மானிப்பதா?

எதிரணி வீரர்களை ஆட விடாமல் தொந்தரவு செய்தல் தகாது, நகைச்சுவை இருக்கலாம் ஆனால் அது எல்லை மீறக்கூடாது, ஸ்லெட்ஜிங்தான் ஒரு வீரரை வீழ்த்தும் என்றால் உங்கள் பவுலர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த லாயக்கற்றவர்களா?” இவ்வ்வாறு கடினமாக ஆஸ்திரேலியாவைச் சாடினார் இயன் சாப்பல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

9 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்