கேல் ரத்னா விருதுக்கு ஸ்ரீஜேஷ் பெயர் பரிந்துரை

By பிடிஐ

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஜேஷ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் நடுகள வீரர் சிங்கலென்சனா சிங் கங்குஜம், முன்கள வீரர் ஆகாஷ்தீப் சிங், மகளிர் அணியின் டிபன்டரான தீபிகா ஆகியோரை பெர்களை அர்ஜுனா விருதுக்கும் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ஸ்ரீஜேஷ் உலக ஹாக்கி அரங்கில் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த 2006-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து இந்திய அணியின் ஒரு அங்கமாக ஸ்ரீஜேஷ் திகழ்ந்து வருகிறார். 30 வயதான அவர், இந்திய அணிக்காக 200 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். 2014, 2018 உலகக் கோப்பை தொடர் மற்றும் 2012, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஸ்ரீஜேஷ் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார்.

2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஹாக்கி அணியிலும், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் 2016 மற்றும் 2018-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் ஸ்ரீஜேஷ் முக்கிய பங்கு வகித்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் வழங்கப்படும் சிறந்த கோல்கீப்பருக்கான விருதுக்கும் ஸ்ரீஜேஷ் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ள ஸ்ரீஜேஷ் கடந்த 2015-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2017-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்.பி.சிங், சந்தீப் கவுர் ஆகியோரது பெயர்கள் தயான் சந்த் விருதுக்கும் பல்ஜித் சிங், பி.எஸ்.சவுகான், ரமேஷ் பதானியா ஆகியோரது பெயர்கள் துரோணச்சார்யா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

6 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்