வருத்தப்பட ஒன்றுமில்லை.. ஐபிஎல் ஒரு வர்த்தகம்: திடீரென தன்னை அழைத்தது குறித்து டேல் ஸ்டெய்ன் கருத்து

By செய்திப்பிரிவு

ஐபிஎல் 2019 ஏலத்தில் டேல் ஸ்டெய்னை எந்த ஒரு அணியும் ஏலம் எடுக்கவில்லை, இந்நிலையில் கடும் உதைகளை வாங்கி வரும் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னை திடீரென அழைத்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி பலம் மிக்கதாகத் திகழ்கிறது என்று கூறும் டேல் ஸ்டெய்னை ஆர்சிபி பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் அழைத்து ஆட சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார்.

 

இது தொடர்பாக டெல் ஸ்டெய்ன் கூறியதாவது:

 

அனைத்தும் விரைவில் நடந்து முடிந்தது. கடந்த வாரம் கேரி கர்ஸ்டன் அழைத்தார். அவர் என்னை விளையாடிக்கொண்டிருக்கிறேனா, பவுலிங் செய்கிறேனா என்று வினவினார், நான் ஆம் என்றேன்.

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் திடீரென வந்து பாதியில் ஆடுவது கடினமானது. உலகக்கோப்பை கிரிக்கெட்டும் நம் கண் முன் நிற்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நான் இன்று இங்கு இருக்கிறேன்.

 

ஐபிஎல் தொடரில் இம்முறை எந்த அணியும் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. அது பற்றி பரவாயில்லை, வருத்தமொன்றும் இல்லை. பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் என்னவெல்லாமோ திட்டமிடுவார்கள். அந்தத் திட்டங்களில் நாம் இல்லை என்றால் அதை தனிப்பட்ட பாதிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஐபிஎல் ஒரு வர்த்தகம்.

 

ஆனால் உள்ளபடியே கூற வேண்டுமென்றால், எங்கு கிரிக்கெட் என்றாலும் எனக்கு ஆடத்தான் பிடிக்கும். என் கையில் பந்தைக் கையில் கொடுத்து விட்டால் அந்த அணி வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும்.

 

இந்த முறை ஆர்சிபி திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, ஆனால் இதுதான் கிரிக்கெட். அதனால்தான் இதனை மீன்பிடிக்கும் விளையாட்டுடன் ஒப்பிடுகிறோம், காரணம் தூண்டிலைப் போடுகிறோம் எப்பொதும் மீன் சிக்குகிறதா இல்லையே. இந்நிலையில் என் ஆற்றல் அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 

இவ்வாறு கூறினார் டேல் ஸ்டெய்ன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

31 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்