ஸ்ரீசாந்த் வழக்கில் உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

By செய்திப்பிரிவு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மத்தியஸ்தர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீசாந்த் அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் 3 வீரர்களுக்கும்வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த்வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டதடையை நீக்கியது.ஆனால், இதை எதிர்த்து கூடுதல் அமர்வில் பிசிசிஐ தரப்பில்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஸ்ரீசாந்த் மீதானதடையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தன் மீதான வாழ்நாள் தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது.  இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பிசிசிஐ தாக்கல் செய்திருக்கும் மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை பிசிசிஐ-யின் மத்தியஸ்தரிடம் (ஓம்புட்ஸ்மன்) ஒப்படைத்திருந்தோம். எனவே பிசிசிஐ-யின் ஓம்புட்ஸ்மன் நீதிபதி டி.கே.ஜெயின் (ஓய்வு) இந்த தண்டனைக் காலத்தைக் குறைப்பது குறித்து அடுத்த 3 மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

29 mins ago

கல்வி

43 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்