ஐபிஎல் 2019: ப்ளே-ஆப் சுற்று ஆட்டங்களின் நேரத்தில் மாற்றம்; ராகுல் திராவிட் குறித்து முக்கிய முடிவு

By ஐஏஎன்எஸ்

12-வது ஐபிஎல் போட்டிகளில் ப்ளே-ஆப் சுற்று தொடங்கும் நேரத்தை மாற்றி அமைத்து,  உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள பிசிசிஐயின் நிர்வாகிகள் குழு முடிவு செய்துள்ளது..

இதன்படி மே 7-ம் தேதி தொடங்கும் ப்ளே-ஆப் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்குப் பதிலாக 30 நிமிடங்கள்முன்கூட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஐபிஎல் போட்டிகளில் லீக் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு முடிகிறது. அப்போது பனி விழுதல் பந்துவீசும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ப்ளே-ஆப் சுற்றை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ப்ளே-ஆப் சுற்றுக்கு போட்டி நடந்தாலும், ஆட்டம் முடிந்தபின் பரிசளிப்பு விழா நடத்தும் நிகழ்ச்சியாலும் நேரமும் அதிகரிக்கிறது. இந்த காரணத்தால் போட்டி முன்கூட்டியே தொடங்கப்படுகிறது.

மேலும், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும்போது சில நேரங்களில் பந்துவீசு அணிகள் அதிகம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த போட்டிகளில் ரோஹித் சர்மா, அஸ்வின், ரஹானே ஆகியோருக்கு பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டமைக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விஷயங்களை தவிர்ப்பதற்காகவே ப்ளே-ஆப் சுற்றை அரை மணிநேரம் முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

8 mins ago

ஆன்மிகம்

18 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்