2019 உலகக்கோப்பை: கவுதம் கம்பிர் தேர்வு செய்த கனவு இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து கம்பிர் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு அணியில் இடமளிக்க பிசிசிஐ தேர்வுக்குழு மறுத்துள்ள நிலையில், கம்பிர் தான் தேர்வு செய்த அணியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்திய அணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னாள் வீரர்கள் பலரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்த தங்களின் கணிப்புகளை, வீரர்களை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், உலகக் கோப்பைக்கான தனது கனவு இந்திய அணியை அறிவித்துள்ளார். அதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடமில்லை. ஆனால், தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் கூட்டணியைப் போல், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் கூட்டணியை கம்பீர் தேர்வு செய்துள்ளார். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். அதன்பின் அணியில் இருந்து அஸ்வின் ஓரம் கட்டப்பட்டார். ஆனால், டெஸ்ட் போட்டியில் மட்டும் அஸ்வின் இடம் பெற்றுவந்தாலும், ஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்டார்.

இந்திய அணியில் அனுபவம் மிக்க சுழற்பந்துவீச்சாளர் தேவை, இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் அனுபவம் கொண்ட வீரர் தேவை என்பதால், அஸ்வின் தேவை என்று கம்பிர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர்த்து ஆல்ரவுண்டர்களாக அணியில் விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மாற்று விக்கெட் கீப்பர்களாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் தேவையில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுலை மாற்று விக்கெட் கீப்பராகவும், தொடக்க வீரராகவும் களமிறக்கலாம் என்றும் கம்பிர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

வேகப்பந்துவீச்சில் உமேஷ் யாதவ் இருப்பில் வைத்து, பிரதான பந்துவீச்சாளர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

கம்பீர் தேர்வு செய்த 16 பேர் கொண்ட அணி விவரம்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிர்த் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்