முடிஞ்சா என்னை பிடிச்சுப் பாரு; ரசிகரிடம் சிக்காமல் ஓடிய தோனி: சேப்பாக்கம் மைதானத்தில் சுவாரஸ்யம்

By செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி நேற்று ஈடுபட்டிருந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் தோனியைச் சந்திக்க விரும்பி மைதானத்துக்குள் குதித்தார்.

ரசிகரைப் பார்த்த தோனி, அவரிடம் 'முடிந்தால் என்னைப் பிடித்துப் பாரு' என்று கூறி ஓடி விளையாடியது ரசிக்கும் விதத்தில் இருந்தது.

12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம்தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கான தீவிரமான பயிற்சியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியினர் நேற்றைய பயிற்சி ஆட்டத்தைக் காண ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மைதானத்துக்குள் எந்த ரசிகர்களும் வந்துவிடாதபடி தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பயிற்சி ஆட்டம் முடிந்த பின் அனைவரும் புறப்பட்டுச் செல்லும்போது பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்தார். தனது ஹீரோவான தோனியைப் பார்க்கும் ஆசையிலும், அவரின் காலில் விழுந்து ஆசிபெறும் முயற்சிலும் அவரைச் சந்திக்க ஓடினார்.

அந்த ரசிகர் ஓடி வருவதைப் பார்த்த தோனி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி பின்னால் ஒளிந்துகொண்டு, 'முடிந்தால் என்னைப் பிடித்துப் பார்' என்று கூறி ஓடத் தொடங்கினார். மைதானத்தில் நாலாபுறமும் ஓடிய தோனியை, அந்த ரசிகரால் பிடிக்க முடியவில்லை. ஆனால், அந்த ரசிகரைப் பாதுகாவலர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இருப்பினும், தன்னைக் காண வந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்து, தோனி அவரை வழியனுப்பி வைத்தார். இந்தக் காட்சியை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தோனி மைதானத்தில் இருந்தால் அவரைக் காண ரசிகர்கள் மைதானத்துக்குள் ஓடி வருவதும், அவரின் காலில் விழுவதும் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களாகும்.

நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி நடந்தபோது, இதேபோல மைதானத்துக்குள் ஒரு ரசிகர் அத்துமீறி நுழைந்து தோனியைச் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

48 mins ago

வாழ்வியல்

53 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்