மிட்செல் ஸ்டார்க்கின் 10 விக்கெட்டுகள்:  கடந்த ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்ற ஆஸி.

By ராய்ட்டர்ஸ்

கான்பெரா டெஸ்ட் போட்டியில் 516 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டும்போது முற்றிலும் சரணடைந்த இல்ங்கை 149 ரன்களுக்கு சுருண்டு மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியைத் தழுவியது.

 

366 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று 2-0 என்று தொடரைக் கைப்பற்றி இந்தியாவிடம் வாங்கிய உதையின் காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டது.

 

பிரிஸ்பனில் நடைபெற்ற பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. கடந்த ஆண்டு ஆஷஸ் வெற்றிக்குப் பிறகு இப்போதுதான் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வெல்லுகிறது.

 

முதல் இன்னிங்ஸில் வீசிய அதே ஆக்ரோஷத்துடன் வீசிய மிட்செல் ஸ்டார்க் 2வது இன்னிங்ஸிலும் 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் வாழ்நாளில் இதுவரை 2வது முறையாக 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார். இதற்கு முன்னால் காலே மைதானத்தில் 2016-ல் ஸ்டார்க் இலங்கை அணிக்கு எதிராகத்தான் தன் முதல் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் (11/94).

 

தொடக்க வீரர் திமுத் கருணரத்னே, கேப்டன் தினேஷ் சந்திமால் ஆகியோரை இன்று அவர் வீழ்த்தினார். மிகவேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர கருணரத்னே நேற்றைய ஸ்கோரில் எதுவும் சேர்க்காமல் 8 ரன்களில் பவுல்டு ஆனார்.  சந்திமால் 4 ரன்களில் ஸ்டார்க் பந்தை நேராக ஸ்லிப்பில் லபுஷான் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  சந்திமால் 4 இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோர் 24 மட்டுமே.

 

நிரோஷன் டிக்வெலா மற்றும் திரிமானே இணைந்து 3வது விக்கெட்டுக்காக 30 ரன்களைச் சேர்த்தனர்.  அப்போது திரிமானே, பாட்கமின்ஸின் எழும்பிய பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னால் டைவ் அடித்து கமின்ஸ் அற்புதமாக அந்தக் கேட்சைப் பிடித்தார்.

 

பிறகு ஸ்டார்க் 2வது ஸ்பெல்லுக்குத் திரும்பி டிக்வெல்லா (27), குசல் பெரேரா ஆகியோர் விக்கெட்டுகளைக் அடுத்தடுத்தப் பந்துகளில் கைப்பற்றினார்.  ஹாட்ரிக் பந்தை தனஞ்ஜய நிறுத்தினார். ஆனால் இவரும் உணவு இடைவேளைக்குப் பிறகு ஜை ரிச்சர்ட்சனிடம் அவுட் ஆனார்.

 

குசல் மெண்டிஸ், சமிகா கருணரத்னே இணைந்து 46 ரன்களை 7வது விக்கெட்டுக்காகச் சேர்த்து ஆஸி.வெற்றியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டனர். குசல் மெண்டிஸ் பிறகு லபுஷானிடம் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சமிகா, கமின்ஸ் பந்தை எட்ஜ் செய்து 22 ரன்களில் காலியானார்.

 

பிறகு ஸ்டார்க் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக கேப்டன் டிம் பெய்ன் அவரைக் கொண்டு வர அவர் விஸ்வா பெர்னாண்டோவை பவுல்டு செய்து சம்பிரதாயங்களை முடித்து வைத்தார், கமின்ஸ் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஆட்ட நாயகனாக மிட்செல் ஸ்டார்க்கும், தொடர் நாயகனாக பாட் கமின்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்