வெளியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியை விட அர்ப்பணிப்புள்ளவர் ஒருவரும் இல்லை: கோலி புகழாரம்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற முதல் கேப்டனான விராட் கோலி ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியிலும் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பிலும் தோனியை வெகுவாகப் பாராட்டினார்.

 

தோனி மீண்டும் ஒரு பினிஷிங் நாயகனாக தன்னை மறுபடியும் கண்டுபிடித்துக் கொண்டு 3 அரைசதங்களுடன் ஒருநாள் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் விராட் கோலி இந்திய வெற்றி பற்றி கூறியதாவது:

 

தோனி கூறியது போல் இது பேட் செய்ய எளிதான பிட்ச் அல்ல. ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். செட் ஆன இரண்டு பேட்ஸ்மென்கள் அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். கடைசியில் வேலையைத் திறம்பட முடித்தார்கள். குல்தீப் யாதவ் ஒருசில போட்டிகள் ஆடினார். எனவே எதிர்பார்க்கும்படியான விஷயங்களை நாம் செய்ய முடியாது.

 

அதனால்தான் சாஹலை இறக்கினோம் அவர் மிக அழகாக வீசினார். இந்தத் தொடர் அபாரமாக அமைந்தது, நீண்ட நாட்களாக இந்து இருக்கிறோம். டி20 தொடரைச் சமன் செய்தோம், டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்றுள்ளோம்.

 

இந்தத் தொடருக்கு முன்னால் இந்த முடிவுகளை எனக்கு அளித்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டிருப்பேன்.

 

ஒரு அணியாக தோனி குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறோம்.  அவர் ரன்களை எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, ஏனெனில் ரன்கள் எடுத்தால்தான் அவரது ரிதம், நம்பிக்கையை மீண்டும் பெற முடியும். குறிப்பாக அதிக சர்வதேசப் போட்டிகளை ஆடாத போது. அப்படிப்பார்க்கும் போது அவர் இங்கு வந்து 3 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றது, நியூஸிலாந்திலும் இந்தியாவிலும் அவர் இந்த பார்மை முன்னெடுத்துச் செல்வார் என்று தோன்றுகிறது.

 

அவருக்கே ஒரு பேட்ஸ்மெனாக தன் ரிதம் மீண்டும் கிடைத்தது குறித்து நம்பிக்கையாக இருக்கிறது.  அவர் ரன்கள் தொடர்ச்சியாக எடுக்கிறார் என்பது அணிக்கு மகிழ்ச்சி அதைவிடவும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே.

 

வெளியே என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம், ஒரு தனிநபராக அவரைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால் இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியை விடவும் அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் வீரர் இல்லை என்றே கருதுகிறோம். ஆகவே அவருக்கான இடத்தை மக்கள் வழங்க வேண்டும், ஏனெனில் அவர் தேசத்துக்காக நிறைய பங்களித்துள்ளார். ஆகவே அவர் தன் ஆட்டம் குறித்து அவரே வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.  அவர் புத்திசாலி கிரிக்கெட்டர்,  என்ன தேவை என்பதை அவர் அறிந்தே வைத்துள்ளார்.

 

ஒரு அணியாக நாங்கள் ஒட்டுமொத்தமாக அவர் அணிக்காக செய்யும் பங்களிப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

 

இவ்வாறு கூறினார் கோலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்