அச்ரேக்கருக்கு மரியாதை அளிக்காத மகாராஷ்டிரா அரசு விழாக்களை புறக்கணியுங்கள்: சச்சினுக்கு சிவசேனா வேண்டுகோள்

By பிடிஐ

பயிற்சியாளர் அச்ரேக்கருக்கு அரசு மரியாதை அளிக்காத மகாராஷ்டிரா அரசு நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் சச்சின் டெண்டுல்கர் புறக்கணிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கருக்கு சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கரை வளர்த்து உருவாக்கிக் கொடுத்த பயிற்சியாளரும் துரோணாச்சரியர் விருது பெற்றவருமான ராமாகந்த் அச்ரேக்கர் புதனன்று மும்பையில் கடந்த 2-ம் தேதி காலமானார்.

சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே போன்ற வீரர்கள் மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர். அச்ரேக்கர் மத்திய அரசின் துரோணாச்சாரியார், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

ஆனால், அச்ரேக்கர் இறந்தபின் அவருக்கு மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மரியாதை அளிக்கவில்லை. இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத், ட்விட்டரில் சச்சின் டெண்டுல்குருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பத்மஸ்ரீ விருதையும், துரோணச்சாரியர் விருதையும் பெற்ற ராமாகந்த் அச்ரேக்கருக்கு மகாராஷ்டிரா அரசு ஏன் அரசு மரியாதை அளிக்கவில்லை, அரசு சார்பில் இறுதி அஞ்சலி ஏன் செய்யப்படவில்லை.

அச்சரேக்கர் இறந்தபின் அவரை மகாராஷ்டிரா அரசு மற்றிலும் அவமானப்படுத்திவிட்டது. இனி எதிர்காலத்தில் மகாராஷ்டிரா அரசு நிகழ்ச்சிகளில், விழாக்களில் பங்கேற்பதை சச்சின் டெண்டுல்கர் புறக்கணிக்க வேண்டும். “ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா வீட்டுவசதி அமைச்சர் பிரகாஷ் மேத்தா கூறுகையில், “ பயிற்சியாளர் அச்ரேக்கருக்கு மாநில அரசு சார்பில் இறுதிஅஞ்சலி அளிக்காதது வேதனைக்குரியது, துரதிருஷ்டமானது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அச்ரேக்கர் குறித்து பாராட்டி தலையங்கம் எழுதப்பட்டு இருந்தது. அதில், சச்சின், காம்ளி, பல்விந்தர்சிங் சந்திரகாந்த் பண்டிட், பிரவின் ஆம்ரே, சஞ்சய் பங்கர், ரமேஷ் பவார் ஆகிய முக்கிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியவர் அச்ரேக்கர். ஆனால், அவருக்கு மாநில அரசு சார்பில் இறுதிமரியாதை, அரசு மரியாதை அளிக்காதது வேதனைக்குரியது.

அரசு தனது பொறுப்புக்களை மறந்துவிட்டது, சிறந்த பயிற்சியாளர் அச்ரேக்கருக்கு அ ரசு மரியாதை அளிக்காமல் இருந்ததற்குத் தகவல் இல்லை என்று குற்றம்சாட்டுகிறது. இது வேதனையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்