ஐசிசி சார்பில் ஸ்மிருதி மந்தனாவுக்கு இரட்டை விருது: டி 20 கேப்டனாக ஹர்மான்பிரீத் கவுர் தேர்வு

By செய்திப்பிரிவு

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீராங்கனை என ஐசிசியின் இரட்டை விருதை வென்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா.

மகளிர் கிரிக்கெட்டில் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை களுக்கான விருதை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதை வென்றுள்ளார் இந்திய அணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா. இடது கை வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 2018-ம் ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 66.90 சராசரியுடன் 669 ரன்களும், 25 டி 20 ஆட்டங்களில் விளையாடி 130.67 ஸ்டிரைக் ரேட்டுடன் 622 ரன்களும் குவித்திருந்தார்.

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், ‘ரேச்சல் ஹெய்ஹோய் ஃபிளின்ட்’ விருதை பெறுகிறார். சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறியதில் மந்தனா சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். அந்தத் தொடரில் அவர், 5 ஆட்டங்களில் 125.35 ஸ்டிரைக் ரேட்டுடன் 178 ரன்கள் சேர்த்திருந்தார். ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் மந்தனா 4-வது இடத்திலும், டி 20 தரவரிசையில் 10-வது இடத்திலும் உள்ளார்.

ஐசிசி விருதை பெறும் 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்மிருதி மந்தனா. இதற்கு முன்னர் கடந்த 2007-ம் ஆண்டு இந்த விருதை ஜூலன் கோஸ்வாமி பெற்றிருந்தார்.

சிறந்த டி 20 வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் அலிஸ்ஸா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பையில் அவர், 6 ஆட்டங்களில் 225 ரன்கள் குவித்திருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லஸ்டோன் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை தட்டிச் சென்றார். அவர், 9 ஒருநாள் போட்டிகளில் 18 விக்கெட்களையும், 14 டி 20 ஆட்டங்களில் 17 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

ஐசிசி-யின் சிறந்த டி 20 அணிக்கு இந்தியாவின் ஹர்மான்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வானார். இந்த அணியில் ஸ்மிருமி மந்தனா, சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவும் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் சிறந்த ஒருநாள் போட்டிக்கான அணியில் ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்