ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவண் 5000 ரன்கள்: கங்குலி சாதனை உடைப்பு, லாரா சாதனை சமன்

By செய்திப்பிரிவு

நேப்பியரில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை அருமையான பந்து வீச்சில் 157 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி தற்போது உணவு இடைவேளக்கு முன்னதாகவே களமிறங்கி விரட்டி வருகின்றனர்.

 

7 ஓவர்கள் முடிவில் 27 ரன்களை இந்திய அணி விக்கெட் இழக்காமல் எடுத்து ஆடிவருகிறது.

 

இதில் ஷிகர் தவண் இன்னிங்சின் 6வது ஓவரில் சவுதி பந்தை பாயிண்டில் தட்டி விட்டு 1 ரன் எடுத்த போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

 

இந்திய அளவில் 114 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டி விராட் கோலி முதலிடம் வகிக்கிரார். கங்குலி 124 இன்னிங்ஸ்களில் 5000 ரன்கள் மைல்கல்லை எட்டி 3ம் இடத்தில் உள்ளார், ஆகவே இவரது சாதனையைக் கடந்தார் ஷிகர் தவண்.

 

உலக அளவில் பிரையன் லாரா 118 இன்னிங்ஸ்களில் 5000 ஒருநாள் ரன்களை எடுத்துள்ளார். ஷிகர் தவண் லெஜெண்டை சமன் செய்துள்ளார்.

 

ஆனால் உலக அளவில் ஹஷிம் ஆம்லா 101 போட்டிகளில் 5000 ரன்கள் மைல்கல்லை எட்டி முதலிடம் வகிக்கிறார்.  விவ் ரிச்சர்ட்ஸ் 114 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்