ஒருநாள் போட்டிக்கு தோனி வந்துவிட்டார்... நீ ஹோபார்ட்டுக்கு விளையாடுகிறாயா?.. அருமையான நகரம்: ரிஷப் பந்த்தை நக்கலடித்த ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்

By செய்திப்பிரிவு

ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய வீரர்களை பின்னால் நின்று கொண்டு கீப்பிங் வேலையுடன் கிண்டல் வேலையையும் செய்கிறார், இதனால் ரிஷப் பந்த் களமிறங்கும் போது அவருக்கு திருப்பி அளிக்கின்றனர் ஆஸ்திரேலிய அணியினர்.

 

இன்று இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட்டில் தன் 2வது இன்னிங்சில் விக்கெட்டுகளை சரமாரியாக இழந்து விட்ட நிலையில் ரிஷப் பந்த் களமிறங்க நேரிட்டது, அவர் நேதன் லயன் பந்துகளில் தொடர்ந்து ஆட்டமிழந்து வரும் நிலையில் அவரது கவனத்தைத் திசைத் திருப்ப ஆஸ்திரேலிய கேப்டன் ரிஷப் பந்த்தை கடுமையாகக் கேலி செய்தது ஸ்டம்ப் மைக்கில் எடுத்தது, இதனை ஆஸ்திரேலிய ஊடகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதில் நேதன் லயன் பந்து வீசும் ஓவர் முழுதும் ரிஷப் பந்த்தை கடுமையாக கேலி செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

அவர் கூறியதாவது:

ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார்.. நாம் இவரை (ரிஷப் பந்த்தை) ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.  ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீட்டு...ஹோபார்ட் மிக அழகான நகரம்.. அங்கு இவருக்கு நல்ல வாட்டர்ஃபிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம்...நான் என் மனைவியை சினிமாக்கு அழைத்துச் செல்லும் போது நீ என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு டிம் பெய்ன் கிண்டலடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 54/5 என்று இந்தியா சரிந்தாலும் வலுவான முன்னிலையுடன் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்