‘இதுதான் டெஸ்ட் கிரிக்கெட், சூப்பர் இந்தியன் டீம்’: சேவாக், ஷேன் வார்ன் பாராட்டு மழை

By செய்திப்பிரிவு

இதுதான் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட், இந்திய அணி வீரர்களின் ஆட்டம் மிகச்சிறப்பு என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலிய லிஜென்ட் ஷேன் வார்ன் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 40 ஆண்டுகளுக்கும் மேலான ஆஸ்திரேலியப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது இதுதான் முதல்முறை என்பதால், வரலாற்று வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் பெறும் 6-வது வெற்றி இதுவாகும்.

இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்த நிலையில், ஷேன் வார்ன், வீரேந்திர சேவாக் ஆகியோரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணியைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், “ டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்த கிரிக்கெட். இறுதிவரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகச்சிறப்பாகப் போராடினார்கள். ஆனால், இந்திய அணியினர் அவர்களைக்காட்டிலும் சிறந்தவர்கள். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தநிலையில், டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றிருப்பது சிறப்பாகும்.

புஜாராவின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இந்த டெஸ்ட் தொடர் ஸ்வாரஸ்யமாக, மிகப்பெரியதாகப் பேசப்படும் என்று உறுதியளிக்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், சுழற்பந்துவீச்சு ஜம்பவானுமான ஷேன் வார்ன் ட்விட்டரில் பதிவிடுகையில், “ ஆஸ்திரேலியாவின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் வெற்றிக்காக சிறப்பாகப் போராடினார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இரு தரப்புக்கும் மிகவும் கடினமான டெஸ்ட் போட்டியாக இருந்தது. வெற்றி பெற்ற கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், கோலிக்கும் பாராட்டுக்குள். மிகச்சிறப்பான வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது. இதை பெர்த் மைதானத்துக்கும் எடுத்துவாருங்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்