தோனி இல்லாதது குறைதான்... ஆனால் எனக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கும் நல்ல புரிதல் உள்ளது: ரோஹித் சர்மா

By செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என்று கைப்பற்றிய ரோஹித் சர்மா கேப்டன்சியில் சில சாதனைகளை முறியடித்தார், இருமுறை இருதரப்பு டி20 தொடரில் எதிரணிக்கு ஒயிட்வாஷ் கொடுத்த கேப்டனாகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு இதே நம்பிக்கையை எடுத்துச் செல்வோம் என்று கூறிய ரோஹித் சர்மா கேள்வி ஒன்றிற்குப் பதில் அளிக்கையில் தோனி, தினேஷ் கார்த்திக் பற்றி பேசினார்.

“தோனி இல்லை என்பது எந்த ஒரு அணிக்கும் ஒரு குறைபாடுதான். ஆனால் தினேஷ் கார்த்திக்குடன் நான் மும்பை இண்டியன்ஸ் அணியில் ஆடியுள்ளேன். நான் கேப்டன். எங்களுக்குள் நல்ல புரிதல் எப்பவுமே இருந்து வந்துள்ளது.  விக்கெட் கீப்பராக கார்த்திக்கின் ஆலோசனைகள் மிக முக்கியமானது.

அதாவது பிட்ச் எப்படி செயல்படுகிறது, வீரர்கள் களத்தில் எங்கு நிற்கிறார்கள் என்பது பற்றிய கோணங்கள், இப்படி சிறு சிறு விஷயங்களில் தினேஷ் மிகவும் உதவிகரம்.

அவரே ஐபிஎல் அணி ஒன்றின் கேப்டன், அதனாலும் அவரது ஆலோசனைகள் முக்கியமாக அமைகிறது, உதவுகிறது.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

அணியில் உள்ள குல்தீப் யாதவ், சாஹல், பாண்டியா போன்றவர்களிடம் கேட்டு வாங்கி தோனி எப்படி அதைச் செய்யச் சொன்னார், இதைச் செய்யச் சொன்னார் என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றனவோ, அவையெல்லாம் எல்லா விக்கெட் கீப்பர்களும், அனைத்து உயர்மட்ட வீரர்களுக்கும் தெரிவதுதான், அதில் தனித்துவமானது எதுவும் இல்லை.

ஆகவே தினேஷ் கார்த்திக்கும் மற்ற எல்லா விக்கெட் கீப்பர்களையும் போல் ஆலோசனைகள் வழங்குவார், அது உதவிகரமாக இருக்கிறது என்று ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக் பற்றி கூறியுள்ளது மிகக் குறிப்பிடத்தகுந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

19 mins ago

க்ரைம்

33 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

41 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்