ஏபிஎல் டி20 போட்டி: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய ஹஸ்ரத்துல்லா

By பிடிஐ

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (ஏபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டி யில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத் துல்லா ஜஜாய்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது ஏபிஎல் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா நகரில் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் காபுல் வனான், பால்க் லெஜன்ட் டி20 அணிகள் மோதின.

இதில் காபூல் வனான் அணிக் காக களமிறங்கிய 20 வயது வீரர் ஹஸ்ரத்துல்லா 12 பந்துகளில் அரை சதமடித்தார். பால்க் லெஜன்ட்ஸ் அணி வீரர் அப்துல்லா மஜாரி வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார் ஹஸ்ரத்துல்லா. அந்த ஓவரில் ஒரு வைட் பந்தை வீசி மொத்தம் 37 ரன்களைக் கொடுத் தார் அப்துல்லா மஜாரி.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை இதுவரை சர் கேர்பீல்ட் சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்ஷெல் கிப்ஸ், யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே விளாசியுள்ளனர். அந்தப் பட்டிய லில் ஹஸ்ரத்துல்லாவும் தற்போது இணைந்துள்ளார்.

மேலும் டி20 போட்டிகளில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங்குடன் தற்போது ஹஸ்ரத்துல் லாவும் இணைந்துள்ளார்.

டி20 போட்டியின்போது இங்கி லாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி 12 பந்துகளில் அரை சதமெடுத்தார் யுவராஜ்.

ஹஸ்ரத்துல்லா, யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் ஆகியோர் டி20 போட்டிகளில் 12 பந்துகளில் அரை சதமடித்த வீரர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டியில் ஹஸ் ரத்துல்லா அபாரமாக ஆடியும் அந்த அணி தோல்வி கண்டது. பால்க் லெஜன்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் காபூல் வனான் அணியை வீழ்த்தியது. காபூல் லெஜன்ட்ஸ் அணிக்காக விளையாடிய, மேற்கிந்தியத் தீவு வீரர் கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 80 ரன்களை விளாசினார்.

முதலில் ஆடிய பால்க் லெஜன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய காபூல் வனான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்