உமேஷ் யாதவுக்கு விராட் கோலி புகழாரம்

By செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக் கெதிராக ஹைதராபாதில் நடை பெற்ற டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இந்த டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு அபாரம். 10 விக்கெட்களை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியை நிலைகுலையச் செய்துவிட்டார் உமேஷ்.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப் பற்றுவதற்கு முக்கியக் காரணமாக உமேஷ் இருந்தார். விரைவில் ஆஸ்திரேலியா வுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. ஆஸ்தி ரேலியாவிலுள்ள மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவை. எனவே ஆஸ்திரேலியத் தொடரில் உமேஷ் யாதவ் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியில் அவர் முக்கிய தருணங்களில் விக்கெட் களை வீழ்த்தினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பந்துவீச இயலாத நிலையில் உமேஷ் யாதவ் தனி யொரு வீரராக அருமையான வேகத்தில் பந்து வீசினார். மேலும் தனது உடற்தகுதியை சீராக வைத் துள்ளார்.

உமேஷ் யாதவ் மிகவும் திறமை யான பந்துவீச்சாளர். ஆனால் பலர் அதை உணரவில்லை. எதிரணி வீரர்களால் ஆட இயலாத பந்துகளை அவர் அற்புதமாக வீசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

52 secs ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்