சென்னையின் எப்சி - டெல்லி இன்று மோதல்

By செய்திப்பிரிவு

 ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிய போதிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 1-0 என தோல்வியடைந்த சென்னை அணி அதன் பின்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறத் தவறியது.

கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கிலும், நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-4 என்ற கணக்கிலும் சென்னை அணி வீழ்ந்திருந்தது. அதேவேளையில் டெல்லி அணியும் இந்த சீசனில் இன்னும் வெற்றியை ருசிக்கவில்லை. புனே, கேரளா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த டெல்லி அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தது. இரு டிராக்கள் மூலம் இரு புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 secs ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்