டெஸ்ட் கிரிக்கெட் ஆட விருப்பம் இல்லையா? ஒதுங்கி விடுங்கள்: கவாஸ்கர் காட்டம்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 1-3 என்று படு தோல்வியடைந்ததையடுத்து இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

"இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆட விருப்பம் இல்லையா? டெஸ்ட்டை விட்டு விலகி விடுங்கள், ஒருநாள் கிரிக்கெட் மட்டும் ஆடுங்கள். ஒரு நாட்டை இப்படி தர்மசங்கடப் படுத்தக் கூடாது” என்று பிபிசி வானொலியின் டெஸ்ட் போட்டி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை அனைத்தும் டாப்-கிளாஸ். இந்திய அணி மிகவும் மோசமாக ஆடியது. ஆகவே இங்கிலாந்து இந்த வெற்றிகளைக் கண்டு அதீத தன்னம்பிக்கை கொள்ள வேண்டாம். இதைவிட பெரிய சோதனைகள் அந்த அணிக்குக் காத்திருக்கிறது.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மைக்கேல் வான் “நாட்டிற்காக போராடும் குணம் இந்த இந்திய வீரர்களிடத்தில் இல்லை” என்று சாடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

30 secs ago

க்ரைம்

35 mins ago

சுற்றுச்சூழல்

41 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்