கிரிக்கெட்டின் டான் நானே’; ஏன் சச்சின் புரட்டியது நினைவில்லையா?- அக்தரின் பெருமிதமும் நெட்டிசன்களின் வறுத்தெடுப்பும்

By செய்திப்பிரிவு

ஷோயப் அக்தர் மிகச்சிறந்த சமரசமற்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதில் ஐயமில்லை, ஆனால் வார்த்தைகள் உலகம் கிரிக்கெட்டை விடவும் மோசமானது என்பதை அவர் பலமுறை பட்டும் திருந்தவில்லை என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்வு.

இந்நிலையில் ட்விட்டரில் அவர் தன்னை ‘டான் ஆஃப் கிரிக்கெட்’ என்றும் தன் பந்துகளில் வீரர்கள் சிலர் அடிவாங்கிய தருண்ங்கள், பவுல்டு ஆன தருணம், சச்சின் யார்க்கரில் பவுல்டு ஆனது என்று புகைப்படங்கள் மிளிர சுயபெருமிதத்துடன் பதிவு ஒன்றை வெளியிட.. வந்ததே கோபம் ரசிகர்களுக்கு... இவருக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அக்தரை அடித்து நொறுக்கிய வீடியோக்களுடன் கடும் வாசகங்களுடன் தீவிர கேலியில் இறங்கிவிட்டனர்.

குறிப்பாக 2003 உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், அக்தரை அடித்த வீடியோக்களை பெரிய அளவில் வெளியிட்டு அக்தரைக் கலாய்த்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் விளாசினார், ஷோயப் அக்தரை ஒரு அப்பர் கட் சிக்ஸ் பெரிய அளவில் இன்று வரை பேசப்படுவதாகும். ஆனால் இதே இன்னிங்சில் ஒரு பெரிய பவுன்சரில் அக்தர்தான் சச்சினை வீழ்த்தினர், கொல்கத்தாவில் ஆசியகிரிக்கெட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் திராவிட், சச்சின் இருவரையும் ‘டெட்லி’ யார்க்கரில் குச்சியைப் பெயர்த்துள்ளார் ஷோயப் அக்தர். இந்த 2 விக்கெட்டுகளினால் இந்திய அணி தோல்வி தழுவ நேரிட்டது வேறு கதை. ஆனால் நெட்டிசன்களுக்கு வரலாறு முக்கியமல்ல, அந்தக் கணம், ஒரு ட்வீட், அதற்கு ஒரு தொடர் கேலி, அதுவும் பாகிஸ்தான் வீரர் என்றால் கேட்கவும் வேண்டுமா?

சரி அக்தர் அப்படி என்னதைத்தான் ட்வீட் செய்து தொலைத்தார்:

டான் ஆஃப் கிரிக்கெட், என்னை அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால் யாரையும் காயப்படுத்த விரும்பியதில்லை. ஆனால் களத்தில் என் நாட்டுக்காகவும் உலகில் இருக்கும் பிற மக்களுக்காகவும் வேகமாக ஓடி வந்து வீசுவதை நேசிக்கிறேன். இதுதான் அக்தரின் ட்வீட். இதில் என்ன இருக்கிறது?

இதற்காக சச்சின் டெண்டுல்கர் இவர் பந்துகளை விளாசும் வீடியோக்களைப் பகிர்ந்து நெட்டிசன்கள் அக்தரை வறுத்தெடுத்துள்ளனர். அதாவது சச்சின் சாத்தியதை மறந்து விட்டு தன்னைத்தானே தாதா, டான் என்றெல்லாம் அவர் கூறிக்கொள்ளலாமா என்பதே நெட்டிடசன்களின் கேலிக்கான காரணம்.

ஆனால் உண்மையில் அக்தர் தாதாவா இல்லையா என்பதை ஜஸ்டின் லாங்கரிடம் கேட்டால்தான் தெரியும், ஏகப்பட்ட பவுன்சரில் அடிவாங்கியுள்ளார் லாங்கர். சிகப்புப் பந்தில் முதல் ஓவரை அக்தர் வீசி எதிர்கொள்வது சாதாரண காரியமல்ல. இதனை லாங்கரே பலமுறை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்