மதுரை பாந்தர்ஸ் அணிக்கு டிஎன்பிஎல் கோப்பை

By செய்திப்பிரிவு

டிஎன்பிஎல் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்து வீசியது.

மதுரை பாந்தர்ஸ் அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி, திண்டுக்கல் அணியின் விக்கெட் களை மளமளவென வீழ்த்தினர்.

ஹரி நிஷாந்த் 1, பால்சந்தர் அனிருத் 4, சதுர்வேத் 9, தோதாத்ரி 0, மோகன் அபிநவ் 1 ரன் எடுத்து வீழ்ந்தனர். ஆனால் கேப்டன் ஜெகதீசன் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 4, லோகேஷ் ராஜ் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மதுரை அணிக்கு ஆரம்பத் திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் ரோகித் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.

ஆனாலும், நான்காவது விக் கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் மற்றும் ஷிஜித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். இதனால், 17.1 ஓவர்களின் முடி வில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்களை குவித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி கோப்பையை வென்றது.

அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சிலம் பரசன் 3 விக்கெட்களை சாய்த்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாம் இடம் பெற்ற திண்டுக்கல் அணிக்கு 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அரை இறுதிவரை தேர்வான அணிகளுக்கு ரூ.40 லட்சம் தரப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்