கபடி அரை இறுதியில் இந்தியா

By செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான கபடியில் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி யில் மகளிருக்கான கபடியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி 33-23 என்ற கணக்கில் தாய்லாந்தையும், 43-12 என்ற கணக்கில் ஜப்பானை யும் வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 38-12 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர் 54-22 என்ற கணக்கில் இந்தோனேஷியாவை தோற்கடித்தது. இதன் மூலம் ஏ பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்துடன் நேற்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 49 - 30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. லீக் ஆட்டங்களின் முடிவில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இந்திய ஆடவர் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஹேண்ட்பாலில் வெளியேற்றம்

மகளிருக்கான ஹேண்ட்பாலில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 19-49 என்ற கணக் கில் வட கொரியாவிடம் தோல் வியடைந்தது. ஏ பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தான் பங் கேற்ற 4 ஆட்டங்களிலும் தோல் வியை தழுவியதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி 19-36 என்ற கணக்கில் கஜகஸ்தானிடமும்,18-45 என்ற கணக்கில் தென் கொரியாவிடமும், 21-36 என்ற கணக்கில் சீனாவிடமும் வீழ்ந்திருந்தது.

வாலிபாலில் தோல்வி

மகளிருக்கான வாலிபாலில் இந்திய அணி 2-வது தோல்வியை சந்தித்தது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று வியட்நாமிடம் 18-25, 22-25, 13-25 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டிருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கஜகஸ்தானை நாளை சந்திக்கிறது.

வூஷூவில் 4 பதக்கம் உறுதி

மகளிருக்கான வூஷூ சன்டா 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி கால் இறுதியில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முபஷ்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் ஆடவருக்கான 56 கிலோ எடைப் பிரிவு சன்டா பிரிவில் இந்தியாவின் சந்தோஷ் குமார் 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் பிதாக்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி னார்.

இவர்களுடன் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் நரேந்தர் கிரேவால், 60 கிலோ எடைப் பிரிவில் சந்தோஷ் குமார் ஆகியோரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இதன் மூலம் வூஷூவில் 4 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 21-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்