எப்போதும் இம்ரான் கேப்டன்தான்

By பெ.மாரிமுத்து

பாகிஸ்தான்  பிரதமர் பதவிக்கான ரேஸில் பாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் முந்திச் செல்லும் நிலையில் உள்ளார். கிரிக்கெட் உலகில் அவர் எப்போதும் முதன்மையான மற்றும் புதிரான கேப்டனாகவே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கிரிக்கெட் வாழ்க்கை யில் இருந்து விடுபட்ட பின்னர் அரசியல் பாதையில் சாத்தியமற்ற சூழ்நிலையில் தன்னை பொது வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டார்.

1980-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் பல்வேறு கேப்டன்கள் இருந்தனர். ஆனால் களத்தில் தலைவராக செயல்பட்டது இம்ரான்கான் மட்டுமே.  ஷார்ஜாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. அப்போது இம்ரான்கான்தான் அணியை ரகசியமாக வழிநடத்தினார் என்ற பேச்சும் அடிபடாமல் இல்லை.

அவரது காலக்கட்டத்தில் இம்ரான்கான் தலைசிறந்த ஆல்ரவுண்டராகவும், உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராகவும் வலம் வந்தார். ஆனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஒரு அந்தஸ்தை அவர் பெற்றது கேப்டன் பதவியில்தான்.

1980 காலக்கட்டங்களில் இம்ரான்கான், கபில் தேவ், ரிட்சர்ட் ஹெட்லி, இயன் போத்தம் ஆகிய 4 சிறந்த ஆல்ரவுண்டர்கள் இருந்தனர். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவர்கள். கபில்தேவ் இயற்கையான திறன்களை கொண்டிருந்தார். ஆனால் அவரின் ஆளுமை திறன்கள் மங்கலாகவே இருந்தன. வெற்றிக்காக குறுக்கு வழிகளை இம்ரான்கான் தேடக்கூடியவர் என்ற எதிர்மறை கருத்தும் அவர் மீது எழுவது உண்டு.

இம்ரான்கானை விட வாசிம் அக்ரம் ரிவர்ஸ் ஸ்விங் கலையில் சிறந்தவராக திகழ்ந்தார். ஆனால் இம்ரான்கானின் கேப்டன் திறனுடன் அக்ரமால் போட்டியிட முடியவில்லை. ‘டார்க் ஆர்ட்’ என வர்ணிக்கப்படும் ரிவர்ஸ் ஸ்விங் தந்திரங்களை இம்ரான்கானிடம் இருந்துதான் வாசிம் அக்ரம் கற்றுக்கொண்டார்.

திறமை மீது இம்ரான்கானுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. ஒருநாள் அவர், எதேச்சையாக டி.வி.யில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் ஸ்லிங் பாணி பந்து வீச்சு இம்ரான்கானுக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த இளம் வீரரின் திறமை குறித்து வியந்தோதினார். அவர், தான் வாக்கர் யூனிஸ். இதன் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வாக்கர் யூனிஸ் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார் என்பதை வரலாறு சொல்லும்.

இதேபோல் 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இன்சமாம் உல்ஹக்கை அறிமுகம் செய்து பிரமாதப்படுத்தினார். இவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய அங்கம் வகிக்க தவறவில்லை. ஆனால் கேப்டனாக இம்ரான்கான் பெரிய சாதனை படைத்ததாக கருதப்படுவது சிறந்த பேட்ஸ்மேனான சர்ச்சை மன்னன் ஜாவித் மியான்தத்தை கையாண்டதுதான்.

இம்ரான்கானின் தலைமைப் பண்புகளை விவாதிக்கும் போது, அவர் எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.1970 காலக்கட்டத்தின் பிற்பகுதியில் தான் இம்ரான்கான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை வேகப்பந்து வீச்சாளராக தொடங்கினார்.

ஒருவிதமாக உடலை வளைத்தபடி பந்து வீசும் பாணியைக் கொண்டிருந்த இம்ரான்கான் எல்லா இடங்களிலும் பந்தை பிட்ச் செய்யும் ஒரு ஒழுங்கற்ற பந்து

வீச்சாளராக இருந்தார். அதேவேளையில் 1980 காலக்கட்டங்களில் அதிகளவிலான கவுன்டி போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். மேலும் சில அறுவை சிகிச்

சைகள் செய்து கொண்ட இம்ரான்கான் அதன் பின்னர் தனது பந்து வீச்சு பாணியை மாற்றினார். பந்து அவரது கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் செய்யும் ஜம்ப் பிரபலமானது.

‘‘இம்ரான்கான் முதல் பந்தை புல்டாசாக வீச வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்வேன். ஏனெனில் குறைந்தது அந்த பந்தில் நான் ஒரு ரன்னாவது எடுத்துவிடுவேன்’’ என கவாஸ்கர் எப்போதும் விளையாட்டாக கூறுவதுண்டு. இதில் இருந்து இம்ரான்கான் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். கவாஸ்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் எடுக்க முடியாமல் 96 ரன்களில் இம்ரான்கான் பந்தில்தான் ஆட்டமிழந்தார் என்பது வேறுகதை.

கவாஸ்கருடன் இணைந்து இம்ரான்கான் நடித்த இந்திய குளிர்பான விளம்பரம் ஒன்று மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சின்தால் சோப்பு விளம்பரம் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார் இம்ரான்கான். அரசியல்வாதியாக இம்ரான்கானின் முகத்தை உலகம் அதிகம் அறிந்திருக்காது என்றாலும், கிரிக்கெட் வீரர் மற்றும்  தலைசிறந்த கேப்டனாக அவர் எப்பொழுதும் மதிக்கப்படுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

15 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்