கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன்

By செய்திப்பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடர் விளையாட இருப்பதால், அதில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் உலகிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக கெயில் வலம் வரப்போகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி மற்றும் 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் சனிக்கிழமை நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய கெயில் 66 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். இந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில்வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இழந்தது.

இந்தப் போட்டியில் 5 சிக்ஸர்களை கெயில் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 476 சிக்ஸர்கள் அடித்திருந்தார், அந்த எண்ணிக்கையை கெயிலும் தொட்டுவிட்டார். இந்தக் கணக்கில் டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என அனைத்தும் அடங்கும்.

476 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை அப்ரிடி 524 போட்டிகளில் எட்டினார், ஆனால், கெயில் இந்தச் சாதனையை 443 போட்டிகளில் எட்டிவிட்டார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருப்பதால், அதில் கெயில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அதிகமான சிஸ்கர்கள் அடித்த வீரர் எனும் பெருமையை கெயில் பெறுவார்.

அப்ரிடியைக் காட்டிலும் 81 போட்டிகள் குறைவாக விளையாடி, கெயில் இந்தச் சாதனையை சமன் செய்துள்ளார். அப்ரிடி ஒருநாள் போட்டிகளில் 351 சிக்ஸர்கள், டி20 போட்டியில் 73 சிக்ஸர்கள், டெஸ்ட் போட்டியில் 52 சிக்ஸர்கள் என மொத்தம் 476 சிஸ்கர்கள் அடித்துள்ளார்.

கெயில் ஒருநாள்போட்டியில் 275 சிக்ஸர்கள், டி20 போட்டியில் 103 சிக்ஸர்கள், டெஸ்ட் போட்டியில் 98 சிக்ஸர்கள் என 476 சிஸ்கர்கள் அடித்துள்ளார். இதில் இந்திய வீரர் மகேந்திரசிங் தோனி 343 சிக்ஸர்கள் அடித்து 5-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

23 mins ago

சுற்றுச்சூழல்

39 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்