ஷரபோவாவை சாய்த்தார் இவானோவிச்

By செய்திப்பிரிவு

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென் னிஸ் போட்டியின் அரையிறு தியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார் செர்பியாவன் அனா இவானோவிச். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனா இவானோவிச் உடல்நலக்குறைவாலும், பதற்றத் தாலும் பாதிக்கப்பட்டபோதும் கடைசிவரை விடாப்பிடியாக போராடி 6-2, 5-7 7-5 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங் கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2-6, 6-2, 6-4 என்ற செட்களில் டென் மார்க்கின் கரோலின் வோஸ் னியாக்கியை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினின் டேவிட் ஃபெரரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டேவிட் ஃபெரர் தனது அரை யிறுதியில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜூலியன் பென்னட்டாவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்