இந்தியாவுக்கு அடுத்த பின்னடைவு?: இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா?

By செய்திப்பிரிவு

 

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அஸ்வினுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில்கூட பந்துவீசவில்லை. இந்தக் காயம் குணமடையாவிட்டால், முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பிடிப்பது கேள்விக்குறியாகும்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இந்திய அணி பறிகொடுத்தது.

இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக, கெம்ஸ்போர்ட் நகரில் எசெக்ஸ் அணியுடன் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இங்கிலாந்துடன் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் இதில் பந்துவீசியும் பேட்டிங் செய்தும் பயிற்சி எடுத்து வருகின்றனர். டெஸ்ட் போட்டிக்கான அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப்பின் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம்பிடிக்கத் தீவிரமாக போராடி வந்த அஸ்வின், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அஸ்வினுக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்காமல், வலை பயிற்சியில் மட்டுமே பந்துவீசி வருகிறார்.

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று பந்துவீச வரவில்லை. காயம் சிறியதாக இருக்கும்போது போதுமான ஓய்வு எடுத்தால், போட்டி தொடங்குவதற்கு காயம் முழுமையாக குணமடைய வாய்ப்பு உண்டு என அறிவுறுத்தப்பட்டதால், அஸ்வினை பயிற்சிப்போட்டியில் களமிறக்கவில்லை.

காயத்தின் தன்மை, காயம் ஆறுவதைப் பொருத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில்விளையாடுவார் எனவும் அணிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே காயம் காரணமாக புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில், இப்போது அஸ்வினும் காயம் காரணமாக விளையாடாவிட்டால் அது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துவிடும். இதன் காரணமாகவே அஸ்வினை பயிற்சிப்போட்டியில் களமிறக்காமல் அணி நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 secs ago

க்ரைம்

6 mins ago

கல்வி

3 mins ago

உலகம்

14 mins ago

இணைப்பிதழ்கள்

28 mins ago

க்ரைம்

33 mins ago

க்ரைம்

40 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்