உமேஷ் யாதவ் 100 டெஸ்ட் விக்கெட்டுகள்; கபில், கும்ப்ளேவுடன் இணைந்தார்

By பிடிஐ

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் மைல்கல்லை உமேஷ் யாதவ் ஆப்கானுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட்டில் எட்டினார். இதே மைல்கல்லை எட்டிய 8வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார் உமேஷ் யாதவ்.

ஆப்கான் அணியின் முதல் இன்னிங்ஸில் ரஹ்மத் ஷாவை எல்.பி.யில் வீழ்த்தி தனது 100வது விக்கெட்டைக் கைப்பற்றினார் உமெஷ் யாதவ். இதற்கு 37 டெஸ்ட் போட்டிகளை எடுத்து கொண்டுள்ளார் உமேஷ் யாதவ்.

100 விக்கெட் மைல்கல்லை எட்டும் 8வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்பதோடு இதே மைல்கல்லை எட்டிய 22வது இந்திய டெஸ்ட் பவுலரானார் உமேஷ்.

இதனையடுத்து கபில்தேவ், ஜாகீர் கான், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் பட்டியலில் உமேஷ் இணைந்தார்.

இஷாந்த் சர்மா இதுவரை 236 விக்கெட்டுகளையும் ஜவகல் ஸ்ரீநாத் 236 விக்கெட்டுகளையும் மொகமது ஷமி 110 விக்கெட்டுகளையும் இர்பான் பத்தான் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிக்ளில் 619 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார், ஹர்பஜன் சிங் 417 டெஸ்ட் விக்கெட்டுகளையும் அஸ்வின் 58 டெஸ்ட் போட்டிகளில் 312 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற ஸ்பின் குழுவான பிஷன் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திர சேகர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர், இவர்கள் தவிர திலிப் தோஷி என்ற இடது கை ஸ்பின் மாஸ்டர் மற்றும் சுபாஷ் குப்தே ஆகியோரும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்