பேட்டிங்கிலும் அசத்துவேன்: ரஷித் கான் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

வாய்ப்பு கிடைக்கும்போது பேட்டிங்கிலும் எனது திறமையை நிரூபிப்பேன் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த டெஸ்டில், உலக சுழல் பந்து வீச்சாளர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள 19 வயதான ரஷித் கான் விளையாட உள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவற்காக ஆப்கானிஸ்தான் பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரஷித் கான் அதிக அளவில் விக்கெட்களை வீழ்த்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மேலும் பேட்டிங்கிலும் அவர் கலக்கி னார். இந்தியாவுடனா வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி குறித்து ரஷித் கான் கூறும்போது, “சுழற்பந்து வீச்சை யாரும் எனக்கு கற்றுத் தர வில்லை.

லெக் ஸ்பின்னாக இருந்தாலும், வித்தியாசமான கோணங்களில் பந்துகளை வீச நானே கற்றுக்கொண்டேன். பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி, இந்தியாவின் அனில் கும்ப்ளே பந்துவீசும்போது அவர்களைப் பார்த்து நான் இதை அறிந்துகொண்டேன்.

கடந்த ஓராண்டாக சிறப்பான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடி வருகிறோம். உடலை முழு தகுதியுடன் வைத்துக் கொள்ள நாங்கள் போதிய பயிற்சி எடுத்து வருகிறோம். பந்துவீச்சுதான் என்னுடைய பிரதான ஆயுதம். ஆனால் பேட்டிங்கிலும் சளைத்தவனல்ல. வாய்ப்புக் கிடைக்கும்போது ரன்களைக் குவிப்பேன். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அணிக்காக பிரகாசிப்பது எனக்குப் பிடித்தமான விஷயம். அவை இரண்டையும் சரிசமாக செய்யக் காத்திருக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

மேலும்