பின்தங்கிய நிலையில் ஜப்பான்

By செய்திப்பிரிவு

ஜப்பான் அணி உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 6-வது முறையாக பங்கேற்கிறது. 2002 மற்றும் 2010-ம் ஆண்டு தொடர்களில் அதிகசபட்சமாக ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுவரை முன்னேறியிருந்தது. சாமுராய் புளூ என செல்லமாக அழைக்கப்படும் ஜப்பான் அணி ஆசிய அளவில் சிறந்து விளங்கினாலும், பந்தை கட்டுப்படுத்துவது, கடத்திச் செல்வது ஆகிய திறன்களில் இன்னும் ஐரோப்பிய, லத்தின் அமெரிக்க அணிகளைவிட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தலைமை பயிற்சியாளர் வாஹித் ஹாலில்ஹோடிசிக் திடீரென நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளராக அகிரா நிஷினோ நியமிக்கப்பட்டார். 2 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் தனக்கு வழங்கப்பட்ட அணியை தயார் செய்துள்ளார் அகிரா நிஷினோ. அவர், அணியில் உள்ள மூத்த வீரர்களை பெரிதும் நம்பி உள்ளார். எனினும் சமீபகால ஆட்டங்களில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பயிற்சி ஆட்டத்தில் கானா அணிக்கு எதிராக 3 டிபன்டர்களை நிஷினோ களமிறக்கினார். ஆனால் அந்த ஆட்டத்தில் ஜப்பான் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதனால் நிஷினோவின் கள வியூகம் கேள்விக்குள்ளாகியிருந்தது. 2014 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் மூட்டை கட்டிய ஜப்பான் இம்முறை ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போலந்து (தரவரிசை 10), கொலம்பியா (16), செனகல் (28) அணிகளும் உள்ளன. இந்த பிரிவு வலுவானது என்றாலும் ஜப்பான் முதல் சுற்றை கடக்கும் என்றே கருதப்படுகிறது. எனினும் இதற்காக ஜப்பான் அதிகம் மெனக்கெட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்