சிஎஸ்கேவுக்கு எதிராக ‘பிங்க்’ உடையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

By ஐஏஎன்எஸ்

ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரில் தங்களை பிளே ஆஃப் சுற்றுக்குத் தக்கவைக்க போராடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்குகிறது.

புற்று நோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற உடையில் ரஹானே தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.

ரஹானே இது குறித்து கூறும்போது, “புற்று நோய் இல்லாத சமூகக்கட்டமைப்புக்கு இந்த முயற்சி ஒரு வீரராக சிறிய ஆனால் முக்கியமான அடியெடுப்பாகும். விழிப்புணர்வை அதிகரிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பிங்க் உடன் மேலும் இரண்டு நிறங்கள் கலந்த உடையில் ராஜஸ்தான் களமிறங்குகிறது.

இந்த 3 வண்ணங்களும் மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், செர்விக்கல் கேன்சர் ஆகியவற்றைக் குறிக்கிறது.

ஆனால் பிங்க் நிறம் குறித்து கிரிக்கெட்டில் ஒரு சுவையான புள்ளி விவரம் உண்டு, தென் ஆப்பிரிக்கா அணி கேன்சர் விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு முறை பிங்க் உடையில் களமிறங்கும் போதும் வெற்றி கண்டுள்ளது, இந்தியாவுக்கு எதிராகவும் சமீபத்தில் பிங்க் உடையில் இறங்கி வெற்றி கண்டுள்ளது.

எனவே ராஜஸ்தான் ராயல்ஸின் சமூகப் பொறுப்புடைமையுடன் அதன் வெற்றி ஆசையும் சிஎஸ்கேவுக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்