செய்தித்துளிகள்: டெல்லி அணி முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 12 ஓவர்களில் 151 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணியால் 5 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்களே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியால் 6 புள்ளிகளுடன் டெல்லி அணி 6-வது இடத்துக்கு முன்னேறியது.

நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் 17 வயதான இந்திய வீரர் லக்சயா சென் 21-15, 15-21, 12-21 என்ற செட் கணக்கில் போராடி மலேசியாவின் லின் டானிடம் தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீரர்களான சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடைசியாக அந்த அணி பாகிஸ்தானில் 2003-ம் ஆண்டு விளையாடியிருந்தது.

காய்ச்சல் காரணமாக மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

பாட்மிண்டன் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மகளிர் பிரிவில் பி.வி.சிந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார். சாய்னா நெவால் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆடவர் ஹாக்கியில் அனுபவம் வாய்ந்த நடுகள வீரர்களான தரம்வீர் சிங், மன்பிரீத் சிங் ஆகியோரது பெயர்களையும், மகளிர் அணியின் கோல் கீப்பர் சவிதாவையும் அர்ஜூனா விருதுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விதமாக கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் அவர் விளையாடமாட்டார் என கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்