ஷுப்மன் கில் ஆட்டத்தை ‘ஹைப்’ செய்யவில்லை, ஆனாலும் அவர் ஸ்பெஷல்தான்: தினேஷ் கார்த்திக்

By செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எளிதாக வீழ்த்தியதற்கு சுனில் நரைனின் ஆல்ரவுண்ட் திறமையும், ஷுப்மன் கில்லின் திடீர் தாக்குதல் பேட்டிங்கும் சிறந்த பங்களிப்பு செய்தன ஷுப்மன் கில் 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசித்தள்ளினார்.

தினேஷ் கார்த்திக்கும் இவரும் 13 ஓவர்களில் 109/4 என்ற நிலையிலிருன்து 17.4 ஓவர்களில் 180/4 என்று விளாசி வெற்றி பெற்றனர். 13வது ஓவருக்குப் பிறகு 3 ஓவர்களில் 46 ரன்கள் விளாசப்பட்டது, தோனியின் களவியூகம் ஊதி எறியப்பட்டது.

ஷுப்மன் கில்லின் ஆட்டம் பற்றி கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

யு-19 வீரர்கள் பலரை எடுத்ததற்காக நிர்வாகத்திற்குத்தான் பெருமை சேர்க்கப்பட வேண்டும். கில் மீது நாங்கள் முதலில் கொஞ்சம் கடுமை காட்டினோம். இவர் கடந்த போட்டிகளிலும் கூட முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அவர் நன்றாக ஆடுகிறார், அவர் ஒரு ஸ்பெஷல்தான், நான் ஊதிப்பெருக்கிச் சொல்லவில்லை, ஹைப் செய்தால் அது அவருக்கு அழுத்தத்தையே அதிகரிக்கும்.

பவுலர்கள் தன்னம்பிக்கையுடன் வீசினர், சென்னை பேட்ஸ்மென்களுக்கு அழுத்தம் கொடுத்தமட்டில் மகிழ்ச்சிதான்.

நானும் கில்லும் நன்றாக செட் ஆகி விட்டோம் ஆகவே விரைவில் முடிக்க வேண்டியதுதான், டி20 கிரிக்கெட்டில் உத்வேகம் இருக்கும் போதே பவுண்டரிகளை விளாசிக் கொள்ள வேண்டும். சுனில் நரைன் ஒரு முழு ஆல்ரவுண்டர். எங்களுக்காக சிறப்பாக சில ஆட்டங்களை அவர் ஆடி வருகிறார்.

இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

27 mins ago

சுற்றுலா

44 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்