விராட் கோலியை திகைக்க வைத்த டீவில்லியர்ஸின் அந்த ஷாட்

By செய்திப்பிரிவு

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்வெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் டீவில்லியர்ஸின் பேட்டிங்கை கண்டு கேப்டன் விராட் கோலி மிரண்டுவிட்டார்.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தை டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து மோதியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

ஐபிஎல் ப்ளேஆப் சுற்றுக்கு செல்ல இந்த வெற்றி மிக முக்கியம் என்பதால், கேப்டன் விராட் கோலியும், முக்கிய வீரர் டீ வில்லியர்ஸும் மிகுந்த பொறுப்புடனும், அதேசமயம், அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

3-வது விக்கெட்டுக்கு இருவரும் 118 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் விராட் கோலி 40 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 37 பந்துகளில் 72 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்தபின், பெவிலியனில் அமர்ந்து டீவில்லியர்ஸின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, டெல்லி வீரர் டிரன்ட் போல்ட் வீசிய 19-வது ஓவரில் டீவில்லியர்ஸ் அடித்த ஷாட்டைப் பார்த்து விராட் கோலி திகைத்து அங்கிருந்து சத்தமிட்டார்.

டிரன்ட் போல்ட் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக ஆப்சைடுக்கு விலகிச் சென்றது. ஆனால், ஆப்சைடுவரை சென்ற டீவில்லியர்ஸ் அந்த பந்தை மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அபாரமான சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதை பெவிலியனில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி திகைத்து சத்தமிட்டு டீவில்லியர்ஸ்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

போட்டியின் வெற்றிக்கு பின் விராட் கோலி ஊடகங்களிடம் கூறுகையில், டீவில்லியர்ஸ் களமிறங்கும்போதே இந்த போட்டியில் நாம் வென்றாக வேண்டும் என்னிடம் கூறிக்கொண்டே வந்தார். அதற்குஏற்றார்போல் சரியான நேரத்தில் வெற்றி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

டெல்லி அணிக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதைப் பார்த்துவியப்பாக இருக்கிறது. பந்துவீச்சை நாம் முதலில் தேர்வு செய்யும் போது, அடுத்து பேட்ஸ்மென்களுக்கு மிகுந்த பொறுப்பு இருப்பது அவசியமாகும்.

எங்கள் அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. அதேசமயம், பேட்டிங்கில் டீவில்லியர்ஸ் சிறப்பாகச் செயல்பட்டார். இன்னும் சில ஓவர்களுக்கு முன்பே ஆட்டத்தை முடித்து, ரன்ரேட்டை உயர்த்திக்கொள்ள முயன்றோம். இருந்தாலும் வெற்றி கிடைத்தது இந்த நேரத்தில் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

9 mins ago

விளையாட்டு

47 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

மேலும்