வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தோம் என்பது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஏலத்தின் முதல் நாளில் வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தோம் என்ற பார்வை சரியானதுதான், ஆனால் 2ம் நாளில் நிறைய இளம் வீரர்களையும் ஏலம் எடுத்தோம் நான் அனுபவத்துக்கு மதிப்பு கொடுப்பவன். இளம் வீரர்கள் வந்தவுடனேயே தங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதில்லை.

நிறைய பேசப்படுகிறது, ஆனால் இளம் வீரர்கள் அரிதாகவே போட்டிகளை வென்று கொடுக்கின்றனர்.

எப்போது ஒரு இளம் வீரர் வந்து டாப் ரன் ஸ்கோரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. சிலபல விதிவிலக்குகள் உண்டு, ரஷீத் கான், வாஷிங்டன் சுந்தர் என்று. ஆனால் அனுபவ வீரர்கள்தான் இதனைச் செய்கின்றனர். எனவே அனுபவத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

டிவைன் பிராவோ, வாட்சன், ஹர்பஜன் ஆகியோர் இன்னமும் சிறந்த போட்டியாளர்கள், தோனி இன்னமும் சிறந்த தலைவர்தான். ஆகவே நாங்கள் எடுத்துள்ள வீரர்கள் திறமை செலவழிந்த வீரர்கள் என்று கூற முடியாது. இந்த ஆண்டு இவர்கள் சிறப்பாகத் திகழ்கிறார்கள்.

2 ஆண்டுகள் தடை பற்றிய காயங்கள் எதுவும் வீரர்களிடத்தில் இல்லை. நன்றாகவே தயார் செய்துள்ளோம்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்