ஆசிய விளையாட்டு போட்டிக்கு கடினமாக உழைக்க வேண்டும்: ஜோஷ்னா சின்னப்பா கருத்து

By செய்திப்பிரிவு

 

காமன்வெல்த் விளையாட்டு தொடரில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஜோடி மகளிர் இரட்டையரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா, சவுரவ் கோஷலுடன் இணைந்து வெள்ளிப்ப தக்கமும் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷல் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜோஷ்னா கூறும்போது, “2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சாம்பியனாக நிலைபெற்ற கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. 4 ஆண்டுகளாக ஸ்குவாஷில் நிறைய நடந்துவிட்டது. எனினும் மீண்டும் நாங்கள் பதக்க மேடையில் இருந்தோம். அந்த தருணத்தை நாங்கள் மீண்டும் இழக்கவில்லை. இது மனநிறைவான வெற்றியாகவே அமைந்துள்ளது. ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அடுத்தகட்ட சவாலுக்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது” என்றார்.

தீபிகா கூறும்போது, “காமன்வெல்த் போட்டிகளைப் பொறுத்தவரை நாங்கள் வெறும் கையோடு திரும்பவில்லை என்பது ஒரு பெரிய திருப்தி” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்