‘தோல்வியின் பாடத்தில் வெற்றியை அழகாக்கும்’- சிஎஸ்கேவை உற்சாகப்படுத்தும் ஹர்பஜன் சிங் ட்வீட்

By செய்திப்பிரிவு

 

தோல்வியின் பாடத்தில் யானை போல் எழுவோம் என்று மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் தோல்விக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் 11-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார். சிஎஸ்கே வந்ததில் இருந்தே ஹர்பஜன் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த தோல்விக்கு பின் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தோல்வி எனும் அடி சறுக்கியது

ஆனால்,நாம் யானைபோல் எழுவதற்கு

நேரம் பிடிக்கப்போவதில்லை குதிரைபோல்

மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம்.

தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடான போட்டிக்கு பின் ஹர்பஜன் சிங் பதிவு செய்த ட்வீட்டில்,

“ வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா

யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது…

மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான் ”

என்று தமிழில் ஹர்பஜன் ட்வீட் செய்து பின்னர் கன்னடத்திலும் ட்வீட் செய்துள்ளார்.

கடைசியில் “நீ நொறுக்கு பங்கு.. தோனி, ராயுடு” என இருவரையும் குறிப்பிட்டுள்ளார். #அன்பின் அடையாளம் என்று ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகுறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், “சிஎஸ்கே-வை வீழ்த்திவிடலாம் என நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை ஐபிஎல் ச்சலம் பலா. இங்கே ஃபேமஸ் தம் பிரியாணி சாப்பிட வரல, தம் பிடிச்சு விளையாட வந்தோம். சாலா பாஹ உந்தி, சாஹர் சிரக தீஸ்தாவுறா.. ஓப்பனிங்கலயே இறக்குவோம் ராயுடுவ… பவுலர்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன் ரைசர்ஸ்” என பதிவிட்டு இருந்தார்.

புனேயில் நடந்த போட்டியைக் காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் சென்றனர். அதுகுறித்து ஹர்பஜன் பதிவிடுகையில்,

“பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை, அமெரிக்காவுல போய் நீங்க மேட்ச் நடத்தினாலும், விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேறும் என் தமிழினம்..உங்கள் அன்புக்கு நான் அடிமை. நீங்க வேற லெவல் மாஸ் யா சென்னை… அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று பதிவிட்டுஇருந்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்