சர்வதேச குத்துச்சண்டை: சுமித், நிகத்துக்கு தங்கம்

By செய்திப்பிரிவு

பெல்கிரேட் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் சுமித் சங்க்வான், வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

இந்தப் போட்டிகள் செர்பியாவில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் சுமித் சங்க்வான் (91 கிலோ), ஈக்வடாரின் காஸ்டிலோ டாரை வென்று தங்கத்தை தட்டி வந்தார்.

இதைப் போலவே மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் நிகத் ஜரீன் (51 கிலோ), கிரீஸ் நாட்டின் கோட்சோர்கோபுலு அய்கத்ரேனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைச் தட்டிச் சென்றார்.

ஆடவர் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஹிமான்ஷு சர்மா, அல்ஜீரியாவின் முகமது தவுரேகுடன் மோதினர். அதில் 5-0 என்ற கணக்கில் ஹுமான்ஷு வெற்றி பெற்று தங்கத்தைக் கைப்பற்றினார்.

இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரோ(54 கிலோ), ரால்ட்டே லால்பாக்மாவி(81 பிளஸ் கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

ஆடவர் பிரிவில் லால்தின் மாவியா (52 கிலோ), வரீந்தர் சிங் (56 கிலோ), பவன் குமார் (69 கிலோ)ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினர்.

மற்றொரு இந்திய வீரர் நரேந்தர்(91 பிளஸ் கிலோ) வெண்கலப் பகத்தக்கைத் கைப்பற்றினார். மகளிர் பிரிவில் ராஜேஷ் நர்வால்(48 கிலோ), பிரியங்கா தாக்குர் (60 கிலோ), ருமி கோகோய் (75 கிலோ), நிர்மலா ராவத் (81 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

32 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்