IPL 2024 | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் - லக்னோ 196 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

லக்னோ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 196 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடந்து வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல, குயிண்டன் டி காக், கே.எல்.ராகுல் இணையே ஓப்பனிங் செய்தது. குயிண்டன் டி காக் இம்முறை 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாயினிஸ் பூஜ்ஜியத்தில் வெளியேற லக்னோவின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக அமைந்தது.

ஆனால் தீபக் ஹூடா மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். 50 ரன்கள் எடுத்திருந்த தீபக் ஹூடாவை அஸ்வின் விக்கெட்டாக்கினார்.

இதன்பின் வந்த நிக்கோலஸ் பூரன் இம்முறை 11 ரன்களுக்கு நடையைக்கட்டினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல்.ராகுல் 76 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

9 mins ago

மேலும்