திலக் வர்மா போராட்டம் வீண் - மும்பையை வென்றது டெல்லி @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐபிஎல் டி20 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் நிலைத்து ஆடிய திலக் வர்மா 63 ரன்களைச் சேர்த்தார்.

ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது. ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் அதிகபட்சமாக 84 ரன்களை விளாசினார்.

வெற்றி இலக்கான 258 ரன்களை துரத்திய மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கலீல் அகமது வீசிய 4ஆவது ஓவரில் 8 ரன்களுக்கு அவுட்டானார் ரோகித் சர்மா. அதற்கு அடுத்த ஓவரில் இஷாந்த் கிஷனும் 20 ரன்களுக்கு விக்கெட். அதற்கடுத்த ஓவரில் சூர்ய குமார் யாதவ் 26 என அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை 10 ஓவர்கள் முடிவில் 115 ரன்களைச் சேர்த்தது.

தொடர்ந்து பாட்னர்ஷிப் அமைத்த ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 சிக்சர்களை விளாசி 46 ரன்களைச் சேர்த்த ஹர்திக் 13ஆவது ஓவரில் அவுட்டாக, அடுத்து வந்த நேஹல் வதேரா அதே ஓவரில் 4 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகளை தாராளமாக தாரை வார்த்ததால் மும்பையால் இலக்கை எட்டுவதில் சுணக்கம் நிலவியது. ஆனால் திலக் வர்மா நிலைத்து ஆடிக்கொண்டிருக்க, டிம் டேவிட் 37 ரன்களில் எல்பிடபள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நபி 7 ரன்களில் கிளம்பினார்.

இறுதிவரை போராடி நம்பிக்கை அளித்து 63 ரன்களைச் சேர்த்த திலக் வர்மா கடைசி ஓவரில் ரன் அவுட்டானதும் ஆட்டம் டெல்லி கைக்குச் சென்றுவிட்டது. இறுதிப் பந்தில் பியூஸ் சாவ்லா அவுட்டாக, 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி கொண்டது.

டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார், ரஷீக் சலாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்