ஐபிஎல் 2018: அம்பயரிங் பார்க்கும் போது அலட்சியம் வேண்டாம்; சர்ச்சைகளை அடுத்து பிசிசிஐ அறிவுறுத்தல்

By பிடிஐ

நடப்பு ஐபிஎல் தொடரில் நடுவர் தீர்ப்புகள் பல கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்கள் அலட்சியம் காட்டாமல் கூடுதல் பொறுப்புடன் செயல்படுமாறு ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா நடுவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவறுகள் சில வேளைகளில் நடப்பதுதான், ஆனாலும் நடுவர்களிடம் ஆட்ட நடுவர்கள் பேச வேண்டும் என்று ஐபிஎல் சேர்மன் கூறியதாக ராஜிவ் சுக்லாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டன.

அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஷர்துல் தாக்கூர், கேன் வில்லியம்சனுக்கு இடுப்புக்கும் மேல் பந்தை புல்டாஸாக வீசியது தெளிவான நோ-பால் ஆகும். வில்லியம்சனின் அதிருப்தி மேலோங்க நடுவர் வினீத் குல்கர்னி வாளாவிருந்தார். இதனையடுத்து அவரைக் கேலி பேசி சன் ரைசர்ஸ் ரசிகர்கள் ட்வீட்மாரிப் பொழிந்தனர்.

இன்னொரு போட்டியில் டிவி ரீப்ளேயில் உமேஷ் யாதவ் அவுட் ஆன பந்துக்கு நோ-பால் செக் செய்யும் போது அவர் ரன்னர் முனையில் இருந்தபோதான வேறொரு பும்ரா பந்து ரீப்ளே காட்டப்பட்டது.

பல வேளைகளில் பவுன்சர் தலைக்கும் மேல் செல்லும் போது ஒரு பவுன்சர் என்று அறிவிக்கப்படுவதில்லை, வைடுகளிலும் பல சர்ச்சைகள் மூண்டு வருகின்றன.

இதனால் ஐபிஎல் போட்டிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதையடுத்து நடுவர்களுக்கு ஐபிஎல் சேர்மன் சுக்லா பொறுப்புடன் நடுவர் பணியாற்றுமாறும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவறிழைக்காத, சறுக்காத நபர்கள் யாரும் இல்லை என்றாலும் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்று ஆட்ட நடுவர்கள் தேவைப்படும் போது தலையீடு செய்யலாம் என்று சேர்மன் ராஜிவ் சுக்லா அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்